
மாநாடு வெளியாகி 50 நாட்கள்… நெகிழ்ச்சியுடன் நன்றி கூறிய சுரேஷ் காமாட்சி…
சுரேஷ் கமாட்சி தயாரிப்பில் சிம்பு நடித்த மாநாடு படம் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது. இப்படத்தை வெங்கட் பிரபு தயாரித்திருந்தார். பல தடைகளை மீறி இப்படம் வெற்றி பெற்றது. டைம் லூப் திரில்லர் வகையில் எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களை கவர்ந்தது.
இப்படம் வெளியாகி இன்றோடு 50 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், எல்லோருக்கும் நன்றி கூறியுள்ளார். இது தொடர்பாக தனது அவர் முகநூலில் பதிவிட்டுள்ளதாவது:
தொடக்கம் எப்படியானதாக இருந்தாலும், முடிவை சிறப்பானதாக்கிவிட வேண்டும்.
மாநாடு படத்தின் தொடக்கம் முதல் வெளியீடு வரை இருந்த எல்லா தடங்கல்களையும்அடித்து நொறுக்கிவிட்டு இன்றோடு ஐம்பதாவது நாள் என்ற அழகிய நிறைவை எட்டியுள்ளது.
நிச்சயம் 100 நாட்கள் சுவரொட்டி ஒட்டியே ஆக வேண்டும் என எனது எதிர்பார்ப்பு உள்ளது.
50 நாட்கள் இந்த சிக்கலான காலகட்டத்தில் படம் திரையரங்கில் ஓடுவது மிக சவாலானது. இந்த 50 நாட்கள் 100 நாட்களுக்கு இணைய...