
தளபதி 65ல் விஜய்க்கு ரெண்டு ஜோடி.. இன்னொரு ஹீரோயின் யார் தெரியுமா?….
விஜய் நடிப்பில் வெளியான மாஸ்ட திரைப்படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. அப்படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் நடிப்பது உறுதியானது. இப்படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படத்தை இயக்கியுள்ள நெல்சன் இயக்கவுள்ளார்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி ஏற்கனவே வெளியாகியது. ஆனால், சமீபத்தில் அந்த செய்தி சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் உறுதி செய்யப்பட்டது.. பூஜா ஹெக்டே தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ‘முகமுடி’ படத்தில் நடித்தவர். அதன்பின் தெலுங்கு சினிமாவுக்கு சென்று முன்னணி நடிகையாக உயர்ந்தவர். அதேபோல், இப்படத்தில் கீதா கோவிந்தம் புகழ் ராஷ்மிகா மந்தனாவும் நடிக்கவுள்ளார் என செய்திகள் கசிந்துள்ளது. ஏற்கனவே சுல்தான் படம் மூலம் அவர் தமிழில் அறிமுகமாகவுள்ளார். கார்த்தியை தொடர்...