
ஆர்.ஆர்.ஆர் டிரெய்லர் வீடியோ செய்த சாதனை….
பாகுபலி திரைப்படத்திற்கு பின் ராஜமவுலி இயக்கியுள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். பாகுபலி போலவே இப்படமும் பிரம்மாண்ட செலவில் தயாராகியுள்ளது. இப்படத்தின் கதை சுதந்திர போரட்ட காலத்தில் நடப்பது போல சித்திரிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், பாலிவுட் நடிகை ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாவுள்ளது. இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் உருவாகியுள்ளது.
இப்படத்தின் டிரெய்லர் வீடியோ நேற்று வெளியாகி அனைத்து மொழி ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றது. இந்த டிரெய்லர் வீடியோ வெளியாகி 24 மணி நேரத்தில் பலரும் இந்த டிரெய்லர் வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர். தெலுங்கில் 21 மில்லியன் பார்வைகளையும், ஹிந்தியில் 21 மில்லியன், கன்னடத்தில் 5.3 மில்லியன், தமிழில் 3.3 மில்லியன், மலையாளத்தில் 2.45 ...