web analytics
Monday, June 27SOCIAL MEDIA

Tag: டாக்டர்

விஜயகாந்த் காலில் இருந்து 3 விரல்கள் அகற்றம்….கேப்டனுக்கு என்னாச்சு?!…

விஜயகாந்த் காலில் இருந்து 3 விரல்கள் அகற்றம்….கேப்டனுக்கு என்னாச்சு?!…

News, Tamil News
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் விஜயகாந்த்.. 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தேமுதிக என்கிற அரசியல் கட்சியையும் துவங்கினார். அதன்பின் அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. ஒருகட்டத்தில் அவருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. சரியாக பேச முடியாமல், நடக்க முடியாமல் இருந்தார். எனவே, தீவிர அரசியலில் அவர் ஈடுபடவில்லை. சமீபத்தில் அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரது காலில் ரத்த ஓட்டம் இல்லாத காரணத்தால் அவரின் காலில் இருந்து 3 விரல்களை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது. இதையடுத்து, அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்....
அந்த நடிகையை ரெக்கமண்ட் செய்த நெல்சன்..நோ சொன்ன விஜய்…

அந்த நடிகையை ரெக்கமண்ட் செய்த நெல்சன்..நோ சொன்ன விஜய்…

News, Tamil News
தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்தவர் பிரியங்கா மோகன். இவரை இயக்குனர் நெல்சன் தனது டாக்டர் படத்தில் நடிக்க வைத்தார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார் பிரியங்கா மோகன். அவரின் நடிப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. மேலும், இப்படம் ரூ100 கோடி வசூலை பெற ஹிட் பட ஹீரோயின் ஆகிவிட்டார் பிரியங்கா மோகன்.. எனவே, விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தில் ஒரு வேடத்தில் அவரை நடிக்க வைக்க நினைத்தார் நெல்சன். ஆனால், வேண்டாம் என சொல்லி விட்டாராம் விஜய். இதில், அப்செட் ஆன பிரியங்காவிடம் ‘கவலைப்படாதே. அடுத்து ரஜினி படத்தை இயக்கப்போவது நான்தான். அதில், உனக்கு நல்ல வேடம் கொடுக்கிறேன்’ என உறுதியளித்துள்ளாராம் நெல்சன்... பிரியங்கா மோகன் டாக்டர் படத்தில் நடித்து கொண்டிருந்த போதே சூர்யாவுக்கு ஜோடியாக ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது....
தேர்தல் படுத்தும் பாடு!. டாக்டரை தொடர்ந்து சுல்தான் ரிலீஸ் தேதியில் மாற்றமா?..

தேர்தல் படுத்தும் பாடு!. டாக்டரை தொடர்ந்து சுல்தான் ரிலீஸ் தேதியில் மாற்றமா?..

News, Tamil News
ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் வருவதால் அந்த வாரம் வெளியாகவிருந்த பல முக்கிய படங்களின் வெளியீடு தள்ளிப்போயுள்ளது. நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் மார்ச் 26ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதேபோல், கார்த்தி நடித்த சுல்தான் திரைப்பம் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால், சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடப்பதால் டாக்டர் ரிலீஸ் தள்ளிப் போகும் என கருதப்பட்டது. இதில் தேர்தல் காரணமாக டாக்டர் வெளியீடு மட்டுமே தள்ளிப்போகிறது. அதேநேரம், சுல்தான் கூறியபடி ஏப்ரல் 2ம் தேதி வெளியாகும் என செய்திகள் வெளிவந்துள்ளது....
யுடியூப்பில் மாஸ் ஹிட் அடித்த ‘செல்லம்மா’ பாடல் வீடியோ…

யுடியூப்பில் மாஸ் ஹிட் அடித்த ‘செல்லம்மா’ பாடல் வீடியோ…

News, Tamil News
கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் டாக்டர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்ற ‘செல்லம்மா’ பாடல் சில மாதங்களுக்கு முன்பு யுடியூப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த பாடல் யுடியூப்பில் இதுவரை 100 மில்லியன் (10 கோடி) பார்வையாளர்களை பெற்றுள்ளது. இது பெரும் சாதனையாக கருதப்படுகிறது. விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடல் வீடியோ இதுவரை 70 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது....
சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு…

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு…

News, Tamil News
கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் டாக்டர். இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படம் மார்ச் 26ம் தேதி வெளியாவதாக படக்குழு இன்று அறிவித்துள்ளது. இந்த செய்தி சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....