web analytics
Saturday, June 25SOCIAL MEDIA

Tag: டோலிவுட்

என் கனவு வேடத்தில் நடிக்க 10 வருடம் ஆச்சு! – நெகிழும் சமந்தா

என் கனவு வேடத்தில் நடிக்க 10 வருடம் ஆச்சு! – நெகிழும் சமந்தா

News, Tamil News
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருபவர் சமந்தா. தற்போது சகுந்தலம் என்கிற புராண படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் சகுந்தலை வேடத்தில் சமந்தா நடிக்கவுள்ளார். இப்படத்தை ருத்ரமா தேவி படத்தை இயக்கிய குணசேகரன் இயக்கவுள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ளது. இப்படத்தின் பூஜையில் சமீபத்தில் சமந்தா கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய சமந்தா ‘நான் இதுவரை 50 படங்களில் நடித்துவிட்டேன். கதாநாயகி, வில்லி, ஆக்‌ஷன் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். ஆனால், சரித்திர படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. தற்போதுதான் அது நிறைவேறியுள்ளது. இந்த கனவு வேடம் கிடைக்க எனக்கு 10 வருடங்கள் ஆகியுள்ளது. இப்படத்திற்கு 100 சதவீதம் உழைப்பேன்’ என அவர் தெரிவித்துள்ளார்....
தெலுங்கிலும் மாஸ் காட்டும் விஜய் சேதுபதி – உப்பெனா எவ்வளவு வசூல் தெரியுமா?..

தெலுங்கிலும் மாஸ் காட்டும் விஜய் சேதுபதி – உப்பெனா எவ்வளவு வசூல் தெரியுமா?..

News, Tamil News
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஜய் சேதுபதி. அவரின் நடிப்பை கண்ட தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமா உலகமும் அவரை அழைத்து அங்கு நடிக்க வைக்கின்றனர். இந்நிலையில் புது முக இயக்குனர் பிச்சிபாபு சனா இயக்கிய உப்பெனா என்கிற படத்தில் வில்லன் வேடத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இப்படம் கடந்த 12ம் தேதி ஆந்திராவில் வெளியானது. இப்படம் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்து 3 நாளில் ரூ.50 கோடியை வசூல் செய்துள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமே தங்களின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது....