
தனுஷுக்கு இவ்வளவு பெரிய மகனா?!.. வைரல் புகைப்படம்….
துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். அதன்பின் படிப்படியாக வளர்ந்து தற்போது சிறந்த நடிகராக மாறியுள்ளார்.
அவரது சொந்த வாழ்க்கையை பொறுத்தவரை நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். இதில் யாத்ரா மூத்தவர். அவருக்கு தற்போது 15 வயது ஆகிறது.
சமீபத்தில் ஐஸ்வர்யாவும், தனுஷும் பிரிந்து விட்டனர். இது திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
இந்நிலையில், சமீபத்தில் நானே வருவேன் படப்பிடிப்புக்காக தனுஷ் ஊட்டி சென்றிருந்த போது அவருடன் அவரின் மூத்த மகன் யாத்ராவும் சென்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
...