web analytics
Wednesday, July 6SOCIAL MEDIA

Tag: தனுஷ்

தனுஷ் எப்போது ஒரு சிங்கம்!.. திடீரென உருகிய அண்ணன் செல்வராகவன்…

தனுஷ் எப்போது ஒரு சிங்கம்!.. திடீரென உருகிய அண்ணன் செல்வராகவன்…

News, Tamil News
தனுஷை உருவாக்கியவர் யார் என்றால் அது அவரின் அண்ணன் செல்வராகவன் என்பது எல்லோருக்கும் தெரியும். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய படங்கள் மூலம் தனுஷை ஒரு சிறந்த நடிகராக மாற்றினார். புதுப்பேட்டை படத்திற்கு பின் தனுஷும் செல்வராகவனும் இணையவே இல்லை. பல வருடங்கள் கழித்து தற்போது நானே வருவேன் படம் மூலம் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், செல்வராகவன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘கடந்த பல வருடங்களாகவே நாங்கள் இருவரும் ஒன்றாக அதிக நேரம் செலவழிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. நாங்கள் இருவரும் அவரவர் வேலையில் பிஸியாக இருந்தோம். ஆனால், தற்போது நானே வருவேன் படம் மூலம் அது நடந்துள்ளது. தனுஷ் தங்கத்தால் ஆன இதயம் கொண்ட ஒரு சிங்கம்’ என பதிவிட்டுள்ளார். https://twitter....
தனுஷுக்கு என் மேல காதலே வந்திடுச்சு!.. உண்மையை உடைத்து பேசிய நடிகை…

தனுஷுக்கு என் மேல காதலே வந்திடுச்சு!.. உண்மையை உடைத்து பேசிய நடிகை…

News, Tamil News
தமிழ் சினிமாவில் காக்கா முட்டை திரைப்படம் மூலம் சிறந்த நடிகை என நிரூபித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன்பின் கனா உட்பட பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். எனவே, பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கிராமத்து கதை என்றால் இயக்குனர்கள் ஐஸ்வர்யா ராஜேஷைத்தான் அழைக்கின்றனர். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த வட சென்னை படத்திலும் இவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தில் நடித்தது பற்றி பேசிய அவர் ‘வெற்றிமாறனின் வழிகாட்டுதலில் என்னால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முடிந்தது. நான் நடித்ததை பார்த்து தனுஷுக்கு காதலே வந்துவிட்டது. வட சென்னையில் எனக்கு கிடைத்த நல்ல பெயர் நான் எப்போதும் எதிர்பார்க்காத ஒன்று’ என அவர் உருகி பேசியுள்ளார்....
ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து சொன்ன தனுஷ்.. இது என்னடா புதுக்கதை!…

ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து சொன்ன தனுஷ்.. இது என்னடா புதுக்கதை!…

News, Song Video, Tamil News, Videos
நடிகர் தனுஷ் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்களும் உள்ளன. ஆனால், திருமணம் ஆகி 17 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் சமீபத்தில் இருவரும் பிரிவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தனர். இது ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமின்றி, திரையுலகினருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இது தவறான முடிவு எனவும், இருவரும் மீண்டும் இணையவேண்டும் எனவும் பலரும் கோரிக்க வைத்தனர். ஆனால், இருவரும் தங்கள் வழியில் நடக்க துவங்கிவிட்டனர். தனுஷ் ஒருபக்கம் படங்களில் நடிக்க, ஐஸ்வர்யா ஒரு ஆல்பம் பாடலை இயக்கியுள்ளார். இதற்கு அனிருத் இசையமைத்து பாடியுள்ளார். இந்த வீடியோ இன்று யுடியூப்பில் வெளியானது. இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். டிவிட்டரில் இந்த வீடியோவை பகிர்ந்து ‘எனது தோழி ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார். https://twit...
ராகவா லாரன்ஸை இயக்குகிறாரா ரஜினி மகள்?… அப்ப சிம்பு என்னாச்சு?!…

ராகவா லாரன்ஸை இயக்குகிறாரா ரஜினி மகள்?… அப்ப சிம்பு என்னாச்சு?!…

News, Tamil News
திரையுலகில் சிம்பு, தனுஷ் இடையே எப்போதும் ஒரு போட்டி உண்டு. பொது இடங்களில் நண்பர்கள் போல் காட்டிக்கொண்டாலும் அவர்கள் இருவருக்கும் இடையே எப்போதும் ஒரு பனிப்போர் உண்டு. ஐஸ்வர்யாவுக்கும், சிம்புவுக்கும் இடையே காதல் இருந்ததாகவும், அது பிரேக் அப் ஆனதாகவும், சிம்புவை கோபப்படுத்தவே ஐஸ்வர்யா தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூட ஒரு கதை இருக்கிறது. தனுஷும் – ஐஸ்வர்யாவும் சமீபத்தில் பிரிவதாக அறிவித்தனர். தனுஷ் ஒருபக்கம் படங்களில் நடித்து வர, ஐஸ்வர்யா ஆல்பம் பாடல் எடுப்பதில் பிஸியானார். அதோடு, அடுத்து அவர் ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. அதோடு, நடிகர் சிம்புவை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக தற்போது செய்திகள் கசிந்துள்ளது. எனவே, இந்த விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், நடிகர் ராகவா லாரன்ஸை சந்தித்து ஐஸ்வர்யா கதை பற்றி விவாதித்த...
தனுஷின் புதிய படத்தின் தலைப்பு.. நாளை முக்கிய அப்டேட்….

தனுஷின் புதிய படத்தின் தலைப்பு.. நாளை முக்கிய அப்டேட்….

News, Tamil News
தனுஷ் தமிழ் படம் மட்டுமின்றி ஹாலிவுட், பாலிவுட் என நடித்து வருகிறார். அவர் நடித்து வந்த ‘அட்ராங்கி ரே’ திரைப்படம் வருகிற 24ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், தனுஷ் நேரிடையாக ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்கவுள்ளார். இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகவுள்ளது. ஏற்கனவே, சேகர் கம்முலா என்கிற இயக்குனர் படத்தில்தான் தனுஷ் நடிப்பதாக இருந்தது. ஆனால், தற்போது இயக்குனர் மாறியுள்ளார்.இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் நாளை காலை 9.36 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷின் கைவசம் தற்போது மாறன், திருச்சிற்றம்பலம், தி கிரே மேன் ஆகிய படங்கள் இருக்கிறது. இந்த நிலையில்தான் அவர் தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். ...
கர்ணன் படத்தில் இடம் பெற்ற ‘தட்டான் தாட்டான்’பாடல் வீடியோ…..

கர்ணன் படத்தில் இடம் பெற்ற ‘தட்டான் தாட்டான்’பாடல் வீடியோ…..

News, Song Video, Tamil News, Videos
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் ‘கர்ணன்’. இப்படத்தில் இடம் பெற்ற ‘கண்டா வரச்சொல்லுங்க’ மற்றும் ‘பண்டாரத்தி’ ஆகிய 2 பாடல்களும் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அப்படத்தில் இடம் பெற்ற ‘தட்டான் தட்டான்’ பாடல் வீடியோவை படக்குழு வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.   ...
கர்ணன் படத்தின் 3வது பாடல் வீடியோ – ‘திரௌபதியின் முத்தம்’ வெளியீடு அப்டேட்

கர்ணன் படத்தின் 3வது பாடல் வீடியோ – ‘திரௌபதியின் முத்தம்’ வெளியீடு அப்டேட்

News, Tamil News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். இப்படத்தில் இடம் பெற்ற கண்டா வரச்சொல்லுங்க மற்றும் பண்டாரத்தி ஆகிய 2 பாடல்களும் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில்,அப்படத்தில் இடம் பெற்ற ‘திரௌபதியின் முத்தம்’ பாடல் வீடியோ நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.   #Karnan 3rd single pic.twitter.com/0uUzAHnCyj — Dhanush (@dhanushkraja) March 9, 2021 ...
விரைவில் அம்மாவாகும் ஒஸ்தி பட நடிகை… வைரல் புகைப்படம்…

விரைவில் அம்மாவாகும் ஒஸ்தி பட நடிகை… வைரல் புகைப்படம்…

News, Tamil News
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘மயக்கம் என்ன’படத்தில் அறிமுகமானவர் நடிகை ரிச்சா. அதன்பின் ‘ஒஸ்தி’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின் திடீரென காணாமால் போனார். திரையுலகிலிருந்தே விலகிய அவர் ஒரு வெளிநாட்டுக்காரரை திருமணமும் செய்து கொண்டி செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில், தற்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அவர் கணவருடன் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து ‘ இந்த தகவலை இவ்வளவு நாட்கள் ரகசியமாக வைத்திருந்தோம். இப்போது மகிழ்ச்சியுடன் இதை வெளியிடுகிறோம். விரைவில் பேபி ரிச்சாவை பார்க்க ஆவலாக இருக்கிறோம்’ என பதிவிட்டுள்ளார்.     We've been keeping a LITTLE secret 🤫 Joe and I are so excited to finally share with everyone.... BABY LANGELLA COMING THIS JUNE! Our hearts are so full of happiness and gratitude 🌺. We can't wait to meet our little bund...
தல அஜித், தனுஷுக்கு தாதா சாகேப் பால்கே விருது… குவியும் பாராட்டுகள்…

தல அஜித், தனுஷுக்கு தாதா சாகேப் பால்கே விருது… குவியும் பாராட்டுகள்…

News, Tamil News
2020ம் ஆண்டுக்கான தாதா சாகேப் சர்வதேச திரைப்பட விழா விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இதில், பன்முகத் திறமை வாய்ந்த நடிகர் விருது அஜித்திற்கும், சிறந்த நடிகருக்கான விருது தனுஷுக்கும் வழங்கப்படவுள்ளது. அதேபோல், சிறந்த நடிகைக்கான விருந்து ராட்சசி படத்திற்காக ஜோதிகாவிற்கும், சிறந்த இயக்குனருக்கான விருது ஒத்த செருப்பு படத்தை இயக்கிய பார்த்திபனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் சிறந்த இசையமைப்பாளர் விருது அனிருத்துக்கும், சிறந்த படமாக டூ லெட் திரைப்படமும் தேர்வாகியுள்ளது....
செல்வராகவன் – தனுஷ் கூட்டணியில் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’- மாஸ் அறிவிப்பு…

செல்வராகவன் – தனுஷ் கூட்டணியில் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’- மாஸ் அறிவிப்பு…

News, Tamil News
கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமா சென் உள்ளிட்ட பலரும் நடித்து செல்வராகவன் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இப்படம் சோழர் பரம்பரை பற்றியதாக இருந்ததால் ரசிகர்களுக்கு வித்தியாசமான, புதுமையான அனுபவத்தை கொடுத்தது. இந்நிலையில், 10 வருடங்களுக்கு பின் இப்படத்தின் 2ம் பாகம் தற்போது உருவாகவுள்ளது. இதில், தனுஷ் நடிக்கவுள்ளார். இந்த செய்தியை செல்வராகவனே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்....