
சந்தோஷத்தை விவரிக்க முடியாது!… அஜித்துடன் இணைவது பற்றி விக்னே சிவன்…
வலிமை படத்துக்கு பின் மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் ஒரு புதிய படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படம் அஜித்தின் 61வது திரைப்படமாகும். இப்படத்தில் ஹீரோ, வில்லன் என இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இப்படத்திற்கு பின் அஜித் தனது 62வது படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.
இந்நிலையில், அஜித்துடன் இணைவய்து பற்றி டிவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள விக்னேஷ் சிவன் ‘எல்லாமே இனிமேல் நல்லாதான் நடக்கும். காணும் கனவெல்லாம் இறைவன் அருளால் பலிக்கும். இந்த வாய்ப்பு கொடுத்த அஜித் சாருக்கு நன்றி. இது எனக்கு ஒரு சிறந்த வாய்ப்பு. இந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது’ என உருகியுள்ளார்.
https://twitter.com/VigneshShivN/status/1504813308003557382...