
வளத்து விட்டவரையே கழட்டி விட்ட சந்தானம்.. சினிமாவுல இதலாம் சஜகமப்பா…
விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்தவர் சந்தானம். அந்த நிகழ்ச்சியின் இயக்குனர் ராம் பாலா. அதன்பின் சந்தானம் சினிமாவில் மெல்ல மெல்ல நடித்து பிரபலமாகி முன்னணி காமெடி நடிகராக மாறினார். பின்னர் ஹீரோவாகவும் மாறினார்.
அப்போது ராம் பாலாவுடன் இணைந்து தில்லுக்கு துட்டு படத்தில் நடித்தார் சந்தானம். அப்படம் மாஸ் ஹிட். 2 வருடங்கள் கழித்து தில்லுக்கு துட்டு 2 பாகமும் வெளிவந்து ஹிட் அடித்தது. அதன்பின் ராம்பாலாவுக்கும், சந்தானத்துக்கும் இடையே ஏதோ மனஸ்தாபம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது தில்லுகு துட்டு 3 எடுக்கும் முயற்சியில் சந்தானம் ஈடுபட்டுள்ளார். இதை ராம் பாலாவிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த ஆனந்த் என்பவர் இயக்கவுள்ளாராம்.
நன்றி மறப்பது, வளத்துவிட்டவரையே கழட்டி விடுவது எல்லாம் சினிமாவில் சகஜம்தான்...
...