
விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் மாஸ் அப்டேட்…
கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்க 2017ம் ஆண்டு துவங்கிய திரைப்படம் துருவ நட்சத்திரம். இப்படத்தில் அவரோடு பார்த்திபன், சிம்ரன், ராதிகா உள்ளிட்ட பலரும் நடிக்க வெளிநாட்டில் இப்படம் படமாக்கப்பட்டது. 80 சதவீதம் முடிந்த நிலையில் சில காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன்பின் விக்ரம் தொடர்ச்சியாக வேறு படங்களில் நடிக்க துவங்கினார்.
தற்போது இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகவுள்ளது. மீதமுள்ள படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கவுள்ளது. விக்ரம் தற்போது ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் முடியவுள்ளதால் இதை முடித்து விட்டு விக்ரம் துருவ நட்சத்திரம் படத்தில் நடிப்பார் எனத்தெரிகிறது....