web analytics
Friday, December 2SOCIAL MEDIA

Tag: தெலுங்கு சினிமா

ஷங்கர் – ராம்சரண் இணையும் கதை முதல்வன் 2 : பரபரப்பு தகவல்

ஷங்கர் – ராம்சரண் இணையும் கதை முதல்வன் 2 : பரபரப்பு தகவல்

News, Tamil News
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் ராம்சரணை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி என 3 மொழிகளிலும் உருவாகவுள்ளது. இந்நிலையில், இப்படம் ஒரு அரசியல் கதை எனவும், இப்படத்தில் ராம் சரண் ஆந்திராவின் முதல்வர் ஆவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளதாம். எனவே, முதல்வன் 2 போன்ற கதையைத்தான் ஷங்கர் இயக்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது....
என் கனவு வேடத்தில் நடிக்க 10 வருடம் ஆச்சு! – நெகிழும் சமந்தா

என் கனவு வேடத்தில் நடிக்க 10 வருடம் ஆச்சு! – நெகிழும் சமந்தா

News, Tamil News
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருபவர் சமந்தா. தற்போது சகுந்தலம் என்கிற புராண படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் சகுந்தலை வேடத்தில் சமந்தா நடிக்கவுள்ளார். இப்படத்தை ருத்ரமா தேவி படத்தை இயக்கிய குணசேகரன் இயக்கவுள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ளது. இப்படத்தின் பூஜையில் சமீபத்தில் சமந்தா கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய சமந்தா ‘நான் இதுவரை 50 படங்களில் நடித்துவிட்டேன். கதாநாயகி, வில்லி, ஆக்‌ஷன் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். ஆனால், சரித்திர படத்தில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. தற்போதுதான் அது நிறைவேறியுள்ளது. இந்த கனவு வேடம் கிடைக்க எனக்கு 10 வருடங்கள் ஆகியுள்ளது. இப்படத்திற்கு 100 சதவீதம் உழைப்பேன்’ என அவர் தெரிவித்துள்ளார்....
சின்ன வயது ஹீரோவுடன் நடிக்கும் அனுஷ்கா – பரபரப்பு அப்டேட்

சின்ன வயது ஹீரோவுடன் நடிக்கும் அனுஷ்கா – பரபரப்பு அப்டேட்

News, Tamil News
தமிழிலும், தெலுங்கிலும் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் அனுஷ்கா. திடீரென ஒரு திரைப்படத்திற்காக குண்டாக மாறினார். அதன்பின் உடல் எடையை குறைக்க முடியாமல் தடுமாறி வருகிறார். தற்போது ஆண்டி உருவத்திற்கு மாறியுள்ள அனுஷ்கா கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் காதலை மையமாக கொண்டு உருவாகும் புதிய தெலுங்கு படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இப்படத்தை மகேஷ் இயக்கவுள்ளார். இப்படத்தில் அனுஷ்காவுக்கு ஜோடியாக இளம் நடிகர் நவீன் போலிஷெட்டி நடிக்கவுள்ளார்....
தெலுங்கில் உருவாகும் திரிஷ்யம் 2 – ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?..

தெலுங்கில் உருவாகும் திரிஷ்யம் 2 – ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா?..

News, Tamil News
மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா உள்ளிட்ட பலரும் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம் திரிஷ்யம். அப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் கமல்ஹாசனும், கவுதமியும் நடித்து அப்படம் வெற்றி பெற்றது. இந்நிலையில், தற்போது த்ரிஷ்யம் படத்தின் 2ம் பாகம் உருவாகியுள்ளது. இதிலும், மோகன்லால், மீனா உள்ளிட்ட சிலர் நடித்துள்ளனர். இப்படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. எனவே, தமிழில் பாபநாசம் 2 உருவாகுமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இதுபற்றி விளக்கமளித்த ஜீத்து ஜோசப் ‘கமல் விரும்பினால் பாபநாசம் 2 எடுக்க நான் தயாராக இருக்கிறேன். அவர் நினைத்தால் மட்டுமே இது சாத்தியம்’ என பதிலளித்துள்ளார். அதேநேரம் தெலுங்கில் இப்படம் உருவாவது உறுதியாகியுள்ளது. மோகன்லால் வேடத்தில் வெங்கடேஷ் நடிக்கவுள்ளனர். வழக்க...
தெலுங்கு பட ஹீரோவை இயக்கும் லிங்குசாமி – இவர் நிலைமை இப்படி ஆகிப்போச்சே!…

தெலுங்கு பட ஹீரோவை இயக்கும் லிங்குசாமி – இவர் நிலைமை இப்படி ஆகிப்போச்சே!…

News, Tamil News
ஆனந்தம், பையா, ரன், சண்டக்கோழி போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் லிங்குசாமி. அதிலும் சண்டக்கோழி அவரை முன்னணி இயக்குனராக மாற்றியது. ஆனால் சூர்யாவை வைத்து அவர் இயக்கிய அஞ்சான் திரைப்படம் தோல்வி அடைந்தது. அதன்பின் விஷாலை வைத்து இயக்கிய சண்டக்கோழி 2-வும் தோல்விப்படமாக அமைந்தது. இந்நிலையில், தற்போது தெலுங்கு படத்தை அவர் இயக்கவுள்ளார். ராம் பொத்தினேனி நடிக்கும் புதிய படத்தை அவர் இயக்கவுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் உருவாகவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது....
தெலுங்கிலும் மாஸ் காட்டும் விஜய் சேதுபதி – உப்பெனா எவ்வளவு வசூல் தெரியுமா?..

தெலுங்கிலும் மாஸ் காட்டும் விஜய் சேதுபதி – உப்பெனா எவ்வளவு வசூல் தெரியுமா?..

News, Tamil News
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஜய் சேதுபதி. அவரின் நடிப்பை கண்ட தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமா உலகமும் அவரை அழைத்து அங்கு நடிக்க வைக்கின்றனர். இந்நிலையில் புது முக இயக்குனர் பிச்சிபாபு சனா இயக்கிய உப்பெனா என்கிற படத்தில் வில்லன் வேடத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இப்படம் கடந்த 12ம் தேதி ஆந்திராவில் வெளியானது. இப்படம் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்து 3 நாளில் ரூ.50 கோடியை வசூல் செய்துள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமே தங்களின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது....