
மாஸ்டர் மீது நம்பிக்கை வைத்து ரிலீஸாகும் சுல்தான் – கை கொடுப்பார்களா ரசிகர்கள்?..
சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா கண்ணா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் சுல்தான். இப்படம் ஏப்ரல் 2ம் தேதி தமிழகமெங்கும் தியேட்டரில் வெளியாகவுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக ரசிகர்கள் தியேட்டருக்கு வரவில்லை எனில் என்ன செய்வது என பயந்த தயாரிப்பாளர் முதலில் இப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்து விடலாம் என்றுதான் நினைத்தாராம். ஆனால், மாஸ்டருக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பின் மீது நம்பிக்கையை மனதில் வைத்தே சுல்தானை தியேட்டரில் ரிலீஸ் செய்யலாம் என அவர் முடிவெடுத்தாராம்.
கொரோனா ப்ரவல் அதிகரித்ததால் தியேட்டர்கள் மூடப்பட்டது. 8 மாதங்கள் கழித்து தியேட்டர்கள் திறக்கப்பட்டு மாஸ்டர் படத்திற்கு மட்டுமே அதிக ரசிகர்கள் வந்து அப்படத்தை வெற்றிப்படமாக மாற்றினர். ஆனால், அப்படத்திற்கு பல படங்கள் வெளியாகி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது....