
குடும்பங்கள் கொண்டாடும் கொம்பு.. ஹீரோவாக அசத்தும் ஜீவா…
விஜய் தொலைக்காட்சியில் லொல்லு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் ஜீவா. மிமிக்ரி கலைஞரும் கூட.. வில்லு உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது கொம்பு திரைப்படம் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். காமெடி கலந்த பேய் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை ஈ. இப்ராஹிம் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜீவா, திஷா பாண்டே, புவிஷா, பாண்டியராஜன், சுவாமிநாதன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
ஒரு கிராமத்தின் பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளது. திடீரென வரும் திகில் காட்சிகள் நம்மை பீதியில் ஆழ்த்துகின்றன. மேலும், படத்தில் இடம் பெற்றுள்ள திருப்பங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. வேகமான திரைக்கதை ரசிகர்களை ஈர்த்துள்ளதால் இப்படம் வரவேற்பை பெற்றுள்ளது. ஹீரோவாக ஜீவா சிறப்பாக நடித்துள்ளார். ஆவிகள் பற்றிய ஆராய்ச்சி செய்யும் மாணவியாக திஷா பாண்டே அசத்தியுள்ளார்.
குறிப்பாக த...