Saturday, April 10SOCIAL MEDIA
Shadow

Tag: நடிகர் தனுஷ்

தனுஷின் மிரட்டலான நடிப்பில் கர்ணன் – டீசர் வீடியோ

தனுஷின் மிரட்டலான நடிப்பில் கர்ணன் – டீசர் வீடியோ

News, Tamil News, Trailers, Videos
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் ‘கர்ணன்’. இப்படத்தில் இடம் பெற்ற ‘கண்டா வரச்சொல்லுங்க’ மற்றும் ‘பண்டாரத்தி’ ஆகிய 2 பாடல்களும் ஏற்கனவே வெளியாகி நெட்டிசன்களிடம் வரவேற்பை பெற்றது. மேலும், அப்படத்தில் இடம் பெற்ற ‘தட்டான் தட்டான்’ பாடல் வீடியோவும் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் வீடியோ தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. கர்ணன் திரைப்படம் வருகிற ஏப்ரல் 9ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.   ...
தேசிய விருதுகள் அறிவிப்பு : சிறந்த திரைப்படம் அசுரன்.. சிறந்த நடிகர் தனுஷ்…

தேசிய விருதுகள் அறிவிப்பு : சிறந்த திரைப்படம் அசுரன்.. சிறந்த நடிகர் தனுஷ்…

News, Tamil News
மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு வருடத்திற்கும் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட இந்தியாவில் தயாராகும் அனைத்து மொழி திரைப்படங்களும் பல பிரிவிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழை பொறுத்தவரை சிறந்த திரைப்படமாக அசுரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும், அப்படத்தில் நடித்த நடிகர் தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார். மேலும், பார்த்தின் இயக்கி நடித்த ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்திற்கு ஜூரி விருதும், விஸ்வாசம் படத்தில் இசையமைத்த இமானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு துணை நடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது....
தனுஷை ஓவர் டேக் செய்த சாய் பல்லவி – யுடியூப்பில் செம ஹிட்..

தனுஷை ஓவர் டேக் செய்த சாய் பல்லவி – யுடியூப்பில் செம ஹிட்..

News, Tamil News
யுடியூப்பில் மாரி படத்தில் தனுஷும், சாய் பல்லவியும் ஆடிய ரவுடி பேபி பாடல் சாதனையை இதுவரை எந்த பாடலும் முறியடிக்கவில்லை. இந்நிலையில், சாய் பல்லவி தனுஷை முந்தியுள்ளார். எப்படி என கேட்குறீகளா?. தனுஷ் நடிப்பில் உருவான கர்ணன் படத்தில் இடம் பெற்ற கண்டா வர சொல்லுங்க பாடலும், தெலுங்கில் சாய் பல்லவி நடித்த லவ் ஸ்டோரி படத்தின் ‘சாரங்க தரியா’ பாடலும் சமீபத்தில் யுடியூப்பில் வெளியானது. இதில், தனுஷ் பாடல் 20 மில்லியன் பார்வையாளர்களையும், சாரங்க தரியா பாடல் 62 மில்லியன் பார்வையாளர்களையும் பெற்றுள்ளது. இது இரண்டுமே நாட்டுப்புற பாடல் என்பது குறிப்பிடத்தக்கது....
தனுஷ் கட்டும் புதிய வீடு எத்தனை கோடி தெரியுமா? – ஷாக் ஆய்டுவீங்க

தனுஷ் கட்டும் புதிய வீடு எத்தனை கோடி தெரியுமா? – ஷாக் ஆய்டுவீங்க

News, Tamil News
நடிகர் தனுஷ் தனது மாமனார் ரஜினி வசிக்கும் போயஸ்கார்டன் இல்லத்திற்கு அருகே ஒரு புதிய வீட்டை கட்டும் பணியை துவங்கியுள்ளார். இப்படத்தின் பூமி பூஜை விழா சமீபத்தில் நடைபெற்ற அதன் புகைப்படங்களும் வெளியானது. இந்நிலையில், தனுஷ் அந்த வீட்டை ரூ.80 கோடி செலவில் கட்டுவது தெரியவந்துள்ளது. ஏற்கனவே விஜய் ரூ.120 கோடியில் புதிய வீட்டை கட்டி வருவதாக செய்திகள் வெளிவந்தது. தற்போது தனுஷும் அதிக பட்ஜெட்டில் வீட்டை கட்டவுள்ளார். அதற்காகத்தான் இரவும் பகலும் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. ...
ஜகமே தந்திரம் ஓடிடி ரிலீஸால் ‘ஏலே’ படத்திற்கு வந்த சிக்கல்…

ஜகமே தந்திரம் ஓடிடி ரிலீஸால் ‘ஏலே’ படத்திற்கு வந்த சிக்கல்…

News, Tamil News
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். கடந்த வருடமே வெளியாகவேண்டிய திரைப்படம் தற்போது வரை வெளியாகவில்லை. இப்படத்தில் இடம் பெற்ற புஜ்ஜி மற்றும் ரகிட ரகிட பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன.ஆனால், இப்படம் நேரிடையாக நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதில் தனுஷுக்கும், கார்த்திக் சுப்பாராஜ் இருவருக்குமே விருப்பமில்லை. ஆனாலும் , தயாரிப்பாளர் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. இந்நிலையில், அவரது தயாரிப்பில் உருவாகியுள்ள மற்றொரு படமான ‘ஏலே’ இன்று வெளியாகவிருந்தது. ஆனால், ஜகம தந்திரத்தை அவர் ஓடிடிக்கு கொடுத்துவிட்ட காரணத்தால் கோபத்தில் இருக்கும் தியேட்டர்கள் அதிபர்கள் ஏலே படத்திற்கு தியேட்டர் கொடுக்கவில்லை. எனவே, இப்படத்தையும் வருகிற 28ம் தேதி விஜய் தொலைக்காட்சியில் வெளியிடுவதாக அறிவித்துவிட்டார்....
போயஸ்கார்டனில் தனுஷ் கட்டும் புது வீடு – வைரலாகும் பூமி பூஜை புகைப்படங்கள்

போயஸ்கார்டனில் தனுஷ் கட்டும் புது வீடு – வைரலாகும் பூமி பூஜை புகைப்படங்கள்

News, Tamil News
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் தனுஷ். அசுரன் படத்தில் அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இவர் போயஸ்கார்டனில் ஒரு புதிய வீடு கட்ட முடிவெடுத்துள்ளார். இதற்கான நிலத்தை சில மாதங்களுக்கு முன்பு வாங்கினார். தற்போது வீடு கட்டும் பணி துவங்கியுள்ளது. அதற்கான பூமி பூஜை கட்டும் பணி இன்று காலை துவங்கியது. இந்த பூஜையில் தனுஷ், அவரின் மனைவி ஐஸ்வர்யா, ரஜினி, லதா ரஜினிகாந்த் உள்ளிட்ட சில மட்டும் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
ஜெட் வேகத்தில் தனுஷ் – கர்ணன் பட முக்கிய அப்டேட் இதோ!…

ஜெட் வேகத்தில் தனுஷ் – கர்ணன் பட முக்கிய அப்டேட் இதோ!…

News, Tamil News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற வேலைகள் நடந்து வருகிறது. இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் தியேட்டரில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் தனது டப்பிங் வேலைகளை தனுஷ் முடித்துக்கொடுத்து விட்டாராம். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது. தனுஷ் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். ஒரு பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரைப்படம்,. அதேபோல், கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு புதிய படம் என பிஸியாக இருந்தாலும் ஜெட் வேகத்தில் கர்ணன் பட டப்பிங்கை அவர் முடித்துக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....
ஓடிடியில் வேண்டாம் ; தியேட்டரில் வெளியிடுங்கள் : போஸ்டர் ஒட்டிய தனுஷ் ரசிகர்கள்

ஓடிடியில் வேண்டாம் ; தியேட்டரில் வெளியிடுங்கள் : போஸ்டர் ஒட்டிய தனுஷ் ரசிகர்கள்

News, Tamil News
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். கடந்த வருடமே வெளியாகவேண்டிய திரைப்படம் தற்போது வரை வெளியாகவில்லை. இப்படத்தில் இடம் பெற்ற புஜ்ஜி மற்றும் ரகிட ரகிட பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன.ஆனால், இப்படம் நேரிடையாக நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இது தனுஷ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஜகமே தந்திரம் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டாம். தியேட்டரில் வெளியிடுங்கள் என தனுஷ் ரசிகர்கள் போஸ்டர்களை ஓட்டி வருகின்றனர். இந்த போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ...
நெட்பிளிக்ஸில் வெளியாகிறதா ஜகமே தந்திரம் – தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சி

நெட்பிளிக்ஸில் வெளியாகிறதா ஜகமே தந்திரம் – தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சி

News, Tamil News
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். கடந்த வருடமே வெளியாகவேண்டிய திரைப்படம் தற்போது வரை வெளியாகவில்லை. இப்படத்தில் இடம் பெற்ற புஜ்ஜி மற்றும் ரகிட ரகிட பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. இந்நிலையில், இப்படம் நேரிடையாக நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இது தனுஷ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாஇ ஏற்படுத்தியுள்ளது....
நாளை வெளியாகும் கர்ணன் முக்கிய அப்டேட் – உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்

நாளை வெளியாகும் கர்ணன் முக்கிய அப்டேட் – உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்

News, Tamil News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற வேலைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நாளை காலை 11 மணிக்கு கர்ணன் படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அநேகமாக, கர்ணன் படம் எப்போது ரிலீஸாகிறது என்பது பற்றிய தகவலாக இருக்கலாம் என்பதால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ...
ஒரே வருடத்தில் ரிலீஸாகும் 4 படங்கள் – தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்

ஒரே வருடத்தில் ரிலீஸாகும் 4 படங்கள் – தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்

News, Tamil News
மசாலா மற்றும் நடிப்பிற்கு தீனி போடும் கதையம்சம் கொண்ட படம் என வருஷத்திற்கு 2 படங்கள் தனுஷ் நடிப்பில் வெளியாகும். கடந்த வருடம் அசுரனும், பட்டாசும் வெளியானது. இந்த வருடம் 4 திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ‘ஜெகமே தந்திரம்’ கடந்த வருடமே முடிந்துவிட்டது. ஆனால், கொரொனா காரணமாக வெளியாகவில்லை. எனவே, இப்படம் இந்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது. அதேபோல், மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அடுத்து, கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. மேலும், பாலிவுட் படமான ‘அட்ராங்கி ரே’ படத்தின் படப்பிடிப்பும் முடிந்து மற்ற வேலைகள் நடந்து வருகிறது. எனவே, இந்த 2 படங்களும் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. எனவே, தனுஷ் நடிப்பில் இந்த வருடம் 4 திர...
செல்வராகவன் – தனுஷ் இணையும் ‘நானே வருவேன்’ – அசத்தல் டைட்டில் லுக்…

செல்வராகவன் – தனுஷ் இணையும் ‘நானே வருவேன்’ – அசத்தல் டைட்டில் லுக்…

News, Tamil News
பல வருடங்களுகு பின் செல்வராகவனும், தனுஷ் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளனர். தாணு தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் டைட்டில் லுக் தற்போது வெளியாகியுள்ளது. 2 புகைப்படங்களை செல்வராகவன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்படத்திற்கு நானே வருவேன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் லுக் தனுஷ் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.  ...
மீண்டும் இணையும் செல்வராகவன் – தனுஷ் – யுவன் கூட்டணி… உற்சாகத்தில் ரசிகர்கள்…

மீண்டும் இணையும் செல்வராகவன் – தனுஷ் – யுவன் கூட்டணி… உற்சாகத்தில் ரசிகர்கள்…

News, Tamil News
துள்ளுவதோ இளமை மூலம் செல்வராகவன் - தனுஷ் - யுவன் சங்கர் ராஜா கூட்டணி துவங்கியது. அப்படத்தின் பாடல்கள் மிகவும் சிறப்பாக அமைந்து ரசிகர்களை சுண்டி இழுத்தது. அடுத்து 7ஜி ரெயின்போ காலணி, ஆயிரத்தில் ஒருவன் என இந்த கூட்டணி பல அற்புதமான பாடல்களை கொடுத்துள்ளது. இந்நிலையில், பல வருடங்களுக்கு பின் இந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். எஸ்.தாணு இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இந்த கூட்டணி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.     View this post on Instagram   A post shared by Selvaraghavan (@selvaraghavan) ...
அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் இயக்குனர் படத்தில் தனுஷ்….பரபரக்கும் சினிமா உலகம்..

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் இயக்குனர் படத்தில் தனுஷ்….பரபரக்கும் சினிமா உலகம்..

News, Tamil News
தமிழ் சினிமாவில் ஆடுகளம், வட சென்னை, அசுரன் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்தவர் நடிகர் தனுஷ். பாலிவுட், ஹாலிவுட் என வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் பாலிவுட்டில் ‘அட்ராங்கி ரே’ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த வருடம் வெளியாகி பல மில்லியன்களை வசூலித்த ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்தை இயக்கிய இயக்குனரின் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஜோ ருசோ மற்றும் ஆண்டனி ருசோ என இருவர் இயக்கியிருந்தனர். தமிழ் , ஹிந்தி என எந்த மொழியிலும் இந்த வாய்ப்பு யாருக்கும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது....