web analytics
Monday, June 27SOCIAL MEDIA

Tag: நடிகர் மோகன்

என்ன வச்சி ஒரு படம் எடுங்க….இயக்குனரை நச்சரிக்கும் மைக் மோகன்…

என்ன வச்சி ஒரு படம் எடுங்க….இயக்குனரை நச்சரிக்கும் மைக் மோகன்…

News, Tamil News
80களில் தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்தவர் நடிகர் மோகன். இவரின் பல திரைப்படங்கள் வெள்ளி விழாவை கொண்டாடியவை. இவருக்கு பெண் ரசிகை கூட்டங்கள் அதிகமாக இருந்தது. இவரது படங்களில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகும். ஒருகட்டத்தில் மார்க்கெட் இழந்த இவர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். கடந்த 20 வருடங்களுக்கு மேல் இவரை திரையில் பார்க்க முடியவில்லை. தற்போது மீண்டும் அவர் நடிக்க துவங்கியுள்ளார். ஹரா என்கிற படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், இயக்குனர் செல்வராகவனை தொடர்பு கொண்ட மோகன் ‘வாங்க சார் நாம சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம்’ என நச்சரித்து வருகிறாராம். ‘வெயிட் பண்ணுங்க சார் சொல்றேன்’ என நழுவி வருகிறாராம் செல்வராகவன்... செல்வராகவன் தற்போது நடிகராக மாறி பீஸ்ட், சாணி காயிதம் உள்ளிட்ட படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது....
மோகன் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகி யார் தெரியுமா?…..

மோகன் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகி யார் தெரியுமா?…..

News, Tamil News
80களில் பல ஹிட் படங்களை கொடுத்தவர் மோகன். மைக் பிடித்து பாடல்களை பாடும் கதாபாத்திரத்தில் அதிகமாக நடித்ததால் மைக் மோகன் என அழைக்கப்பட்டவர். இவரின் பல திரைப்படங்கள் வெள்ளி விழா படங்கள் ஆகும். இவர் நடிக்கும் பாடல்களில் மெலடியான பாடல்கள் இடம் பெற்றிருக்கும். இப்போதும் பலரும் கார் பயணத்தின் போது கேட்பது மோகன் பட பாடல்கள்தான். பல வருடங்களுக்கு பின் மோகன் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஹரா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை விஜய்ஸ்ரீ என்பவர் இயக்கவுள்ளார். இந்நிலையில், மோகனுக்கு ஜோடியாக நடிகை குஷ்பு நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. பல சீனியர் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள குஷ்பு தற்போது சூப்பர் சீனியர் நடிகருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது....