இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர், கதாசிரியர், பாடலாசியர் என சகலகலா வல்லவனாக வலம் வந்தவர் டி.ராஜேந்தர். 80களில் பல ஹிட் படங்களை கொடுத்தவர். அவரது மகன் சிம்பு வளர வளர இவர் திரையுலகிலிருந்து விலகி இருந்தார்.
அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவிப்பது, சிம்பு படங்களில் பாடுவது என பரபரப்பை ஏற்படுத்துவார்.
இந்நிலையில், திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்துள்ளது. மேலும், அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் எனவும், விரைவில் அவரை சிங்கப்பூர் அழைத்து சென்று சிகிச்சை அளிக்க அவரின் குடும்பத்தினர் முடிவெடுத்திருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளது.
இந்த செய்தி சிம்பு ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
ஜி.வி.பிரகாஷ் நடித்த டார்லிங் திரைப்படத்தில் அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. அதன்பின் பல திரைப்படங்களில் இவர் நடித்துவிட்டார். இவரும் ஈரம்,மிருகம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்த ஆதியும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்தனர். சமீபத்தில் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இன்று காலை அவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.
...