web analytics
Wednesday, January 19SOCIAL MEDIA

Tag: நாக சைத்தன்யா

சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால்?… விவாகரத்துக்கு பின் மனம் திறந்த நாக சைதன்யா…

சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால்?… விவாகரத்துக்கு பின் மனம் திறந்த நாக சைதன்யா…

News, Tamil News
தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் சமந்தா. சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த புஷ்பா படத்தில் கூட அவர் நடனமாடிய ‘ஓ சொல்றியா’ பாடல் செம ஹிட் ஆனது. நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவும் 2017ம் வருடம் திருமணம் செய்து கொண்டனர். 4 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்களுக்குள் சில காரணங்களால் மனக்கசப்பு ஏற்பட்டது. எனவே, சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் ஒருவரை ஒருவர் பிரிந்தனர். அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டது. ஆனால், இருவரும் இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், சமீபத்தில் நாக சைத்தன்யா அளித்த பேட்டியில் ‘பிரிந்திருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை. எங்கள் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காகவே நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு இது. இதுபோன்ற சூழலில் விவகாரத்து ஒன்றே சிறந்த முடிவு. சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால் நானும் மகிழ்ச்சியாக இருப்பேன்’ என தெரிவித்துள்ளார்...
ஹீரோவை வெயிட்டிங் மோடில் வைத்த நடிகை பூஜா ஹெக்டே…..

ஹீரோவை வெயிட்டிங் மோடில் வைத்த நடிகை பூஜா ஹெக்டே…..

News, Tamil News
தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்திருப்பவர் பூஜா ஹெக்டே.. இவருடன் ஜோடி பல முன்னணி நடிகர்கள் போட்டி போட்டு வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கில் இயக்குனர் விக்ரம் குமார் இயக்கி வரும் ‘தேங்க்யூ’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டேவிடம் படக்குழு கேட்டது. ஆனால், அவர் இன்னும் முடிவை சொல்லவில்லை. இப்படத்தில் ஹீரோவாக நாக சைத்தன்யா நடித்து வருகிறார். ஏற்கனவே படத்தில் பல காட்சிகளை படக்குழு படம்பிடித்துவிட்டது. அடுத்து யூரோப்பில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.; பூஜா ஹெக்டே வந்தால் அவரை வைத்து எடுப்பது எனவும், அவர் இல்லையேல் ரித்து வர்மாவை வைத்து எடுப்பது எனவும் முடிவெடுத்துள்ளனராம். இப்படத்தை முடித்துவிட்ட பின்னரே நாக சைத்தன்யா அமீர்கான் படத்திற்கு செல்வது குறிப்பிடத்தக்கது....