web analytics
Tuesday, July 5SOCIAL MEDIA

Tag: நானே வருவேன்

தனுஷ் எப்போது ஒரு சிங்கம்!.. திடீரென உருகிய அண்ணன் செல்வராகவன்…

தனுஷ் எப்போது ஒரு சிங்கம்!.. திடீரென உருகிய அண்ணன் செல்வராகவன்…

News, Tamil News
தனுஷை உருவாக்கியவர் யார் என்றால் அது அவரின் அண்ணன் செல்வராகவன் என்பது எல்லோருக்கும் தெரியும். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய படங்கள் மூலம் தனுஷை ஒரு சிறந்த நடிகராக மாற்றினார். புதுப்பேட்டை படத்திற்கு பின் தனுஷும் செல்வராகவனும் இணையவே இல்லை. பல வருடங்கள் கழித்து தற்போது நானே வருவேன் படம் மூலம் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், செல்வராகவன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘கடந்த பல வருடங்களாகவே நாங்கள் இருவரும் ஒன்றாக அதிக நேரம் செலவழிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. நாங்கள் இருவரும் அவரவர் வேலையில் பிஸியாக இருந்தோம். ஆனால், தற்போது நானே வருவேன் படம் மூலம் அது நடந்துள்ளது. தனுஷ் தங்கத்தால் ஆன இதயம் கொண்ட ஒரு சிங்கம்’ என பதிவிட்டுள்ளார். https://twitter....
செல்வராகவன் – தனுஷ் இணையும் ‘நானே வருவேன்’ – அசத்தல் டைட்டில் லுக்…

செல்வராகவன் – தனுஷ் இணையும் ‘நானே வருவேன்’ – அசத்தல் டைட்டில் லுக்…

News, Tamil News
பல வருடங்களுகு பின் செல்வராகவனும், தனுஷ் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளனர். தாணு தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் டைட்டில் லுக் தற்போது வெளியாகியுள்ளது. 2 புகைப்படங்களை செல்வராகவன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்படத்திற்கு நானே வருவேன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் லுக் தனுஷ் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.  ...