web analytics
Monday, June 27SOCIAL MEDIA

Tag: பாஜக

திடீரென ரசிகர்களை எச்சரித்த நடிகர் விஜய்.. பின்னணி இதுதானாம்!….

திடீரென ரசிகர்களை எச்சரித்த நடிகர் விஜய்.. பின்னணி இதுதானாம்!….

News, Tamil News
சமூகவலைத்தளங்களில் அரசியல்வாதிகளை அவதூறாக விமர்சிக்கக் கூடாது, மீம்ஸ் போட்டு கிண்டலடிக்கக் கூடாது என விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அந்த இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அரசு பதவிகளில் இருப்பவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோரை விஜய் மக்கள் இயக்கத்தினர் விமர்சிக்க கூடாது. மீறி விமர்சித்தால் மக்கள் இயக்கத்தை விட்டு நீக்குவதுடன் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் ரசிகர்கள் விமர்சனம் செய்யக்கூடாது. பத்திரிக்கை, இணையதளங்கள், போஸ்டர்களில் விமர்சித்து எழுதவோ, பதிவிடமோ, மீம்ஸ் போடவோ கூடாது’ என இன்று காலை அறிக்கை வெளியானது. தற்போது இதன் பின்னணி தெரியவந்துள்ளது. சமீபத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் டிரெய்லர் வெளியானது. அதில், காவி நிற துணியை விஜய் கத்தியால் குத்தி கிழிப்பது போல ஒரு காட்ச...
சினிமா உங்களுக்கு பொழுதுபோக்கு…. எனக்கு தொழில் – ரசிகர்களுக்கு அஜித் அறிவுரை

சினிமா உங்களுக்கு பொழுதுபோக்கு…. எனக்கு தொழில் – ரசிகர்களுக்கு அஜித் அறிவுரை

News, Tamil News
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. ஆனால், படம் பற்றிய எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, முதல்வர் பழனிச்சாமியிடம் வலிமை அப்டேட் கேட்ட கதையெல்லாம் நடந்தது. அதோடு, நேற்று சென்னை வந்த பிரதமர் மோடியிடம் சில அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்ட வீடியோவும் இணையத்தில் வெளியானது. இதைத்தொடர்ந்து, வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘வலிமை படம் மீதான உங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன். வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ளோம். கொஞ்ச நாள் பொறுத்திருங்கள்’ என பதிவிட்டுள்ளார். போனிகபூரே அதிகாரப்பூர்வமாக வலிமை பட அப்டேட்டை கொடுத்திருப்பது அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், நடிகர் அஜித் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் ‘கடந்த சில நாட்களாக என்...
பத்மவிபூஷன் விருதை திருப்பி அனுப்பும் இளையராஜா – ஏன் தெரியுமா?..

பத்மவிபூஷன் விருதை திருப்பி அனுப்பும் இளையராஜா – ஏன் தெரியுமா?..

News, Tamil News
இளையராஜா பல வருடங்களாக இசையமைக்க பயன்படுத்தி வந்த பிரசாத் ஸ்டுடியோ விவகாரம் அவருக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், அவரை அங்கிருந்து காலி செய்ய சொல்லி அழுத்தம் கொடுத்தனர். மேலும், அவர் பயன்படுத்திய பொருட்களை குப்பை போல் குவித்து அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தினார். இதன் காரணமாக, பிரசாத் ஸ்டுடியோவில் கடைசியாக அவர் தியானம் செய்ய நீதிமன்றம் அனுமதி கொடுத்தும் இளையராஜா அங்கு செல்லவில்லை. இந்நிலையில், இந்த விவகாரத்தால் மத்திய அரசு தனக்கு வழங்கிய பத்மவிபூஷன் விருதை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்ப இளையராஜா திட்டமிட்டுள்ளதாக இசையமைப்பாளரும், திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க தலைவர் தீனா தெரிவித்துள்ளார்....