
கமல் இல்லாமல் துவங்கும் இந்தியன் 2 ஷூட்டிங்….
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி சங்கர், கஜோல் உள்ளிட்ட பலரும் நடிக்க துவங்கிய திரைப்படம் இந்தியன் 2. ஆனால், படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு 3 பேர் இறந்த நிலையில், சிறிது நாள் மட்டும் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், தற்போது மீண்டும் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. ஆனால், இதில் கமல்ஹாசன் கலந்து கொள்ளவில்லை. தேர்தல் பிரச்சாரம் இருப்பதால் ஏப்ரலுக்கு பின் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என செய்திகள் வெளியாகியுள்ளது....