
பத்மவிபூஷன் விருதை திருப்பி அனுப்பும் இளையராஜா – ஏன் தெரியுமா?..
இளையராஜா பல வருடங்களாக இசையமைக்க பயன்படுத்தி வந்த பிரசாத் ஸ்டுடியோ விவகாரம் அவருக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், அவரை அங்கிருந்து காலி செய்ய சொல்லி அழுத்தம் கொடுத்தனர். மேலும், அவர் பயன்படுத்திய பொருட்களை குப்பை போல் குவித்து அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தினார். இதன் காரணமாக, பிரசாத் ஸ்டுடியோவில் கடைசியாக அவர் தியானம் செய்ய நீதிமன்றம் அனுமதி கொடுத்தும் இளையராஜா அங்கு செல்லவில்லை.
இந்நிலையில், இந்த விவகாரத்தால் மத்திய அரசு தனக்கு வழங்கிய பத்மவிபூஷன் விருதை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்ப இளையராஜா திட்டமிட்டுள்ளதாக இசையமைப்பாளரும், திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க தலைவர் தீனா தெரிவித்துள்ளார்....