
பீஸ்ட் படப்பிடிப்பில் குழந்தைகளுடன் நடனமாடும் விஜய்… செம க்யூட் வீடியோ….
தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை வைத்திருப்பவர் நடிகர் விஜய். இளைய தளபதி என அழைக்கப்பட்டு வந்த அவர் தற்போது தளபதி என அழைக்கப்பட்டு வருகிறார். இவரின் ஒவ்வொரு திரைப்படம் பல கோடிகளை வசூலித்து வருகிறது. அவரின் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் கடந்த 13ம் தேதி வெளியாகி விஜய் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தாலும் நல்ல வசூலை இப்படம் பெற்று வருகிறது. வெளியான முதல நாளில் இப்படம் தமிழகத்தில் ரூ.38 கோடி வசூல் ஆனதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பீஸ்ட் படப்பிடிப்பின் போது இரு குழந்தைகளுடன் விஜய் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
https://twitter.com/irshad5005/status/1514826335105200130...