
துபாயில் ஹேப்பி நியூ இயர்… காதலுடன் கொண்டாடிய நயன் (வீடியோ)…
நானும் ரவுடிதான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கிய போது, அப்படத்தில் கதாநாயகியாக நடித்த நயன்தாராவுக்கும் அவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதன்பின் பல வருடங்கள் லிவ்விங் டூ கெதரில் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று ஜாலியாக பொழுதை போக்கி வருகின்றனர். ஒருபக்கம் திரைப்படங்களில் நடிப்பது, தயாரிப்பது, படங்களை வெளியிடுவது என இருவரும் பிஸியாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், புது வருடத்தை கொண்டாட இருவரும் சில நாட்களுக்கு முன்பு துபாய் பறந்து சென்றனர். அங்கு ஜாலியாக பொழுதை கழித்த இருவரும் நேற்று புத்தாண்டை சிறப்பாக கொண்டாடினர்.
நேற்று இரவு 12 மணியளவில் அவர்கள் இருவரும் புத்தாண்டு கொண்டாடிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை விக்னேஷ் சிவனும் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார்.
...