
தியேட்டரில் தாக்கப்பட்டாரா புளூசட்ட மாறன்?….அவரே வெளியிட்ட புகைப்படம்…
தமிழ் டாக்கீஸ் யுடியூப் சேனலில் புதிய திரைப்படங்களை விமர்சனம் செய்து வருபவர் புளூசட்டமாறன். இவர் நல்ல கதையம்சம் கொண்ட கலை சினிமாக்களை மட்டுமே பாராட்டி பேசுவார். வழக்கான கமர்சியல் மசாலா படங்களை கடுமையாக கிண்டலடித்தும், நக்கலடித்தும் பேசுவார். இதனால், ரஜினி, அஜித், விஜய், சிம்பு என பலரின் ரசிகர்களின் கோபத்தையும் அவர் சம்பாதித்தார்.
வலிமை படத்தை கடுமையாக கிண்டலடித்து விமர்சனம் செய்தார். குறிப்பாக அஜித்தின் தோற்றத்தை நக்கலடித்து பேசியிருந்தார். இது அஜித் ரசிகர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. எனவே, டிவிட்டரில் அவரை கடுமையாக அவர்கள் திட்டி வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் உள்ள பி.வி.ஆர் தியேட்டருக்கு மாறன் சென்றிருந்த போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்பம் அஜித் ரசிகர்களிடையே பரவியது. மாறனை சில அஜித் ரசிகர்கள் தாக்கியதாகவும் செய்திகள் பரவியது. ஆனால், இதை மாறன் மறுத்துள்ளார். அந்த புகைப...