
சென்னையில் பிரம்மாண்ட செட் – இறுதிகட்ட படப்பிடிப்பில் மாநாடு
ஈஸ்வரன் திரைப்படத்திற்கு பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இப்படம் தொடர்பான போஸ்டர்கள் ஏற்கனவே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. படத்தின் இறுதிகட்ட காட்சி ஒரு அரசியல் மாநாடு நடக்கும் இடத்தில் நடிப்பது போல எடுக்கப்படவுள்ளது. எனவே, சென்னை அடுத்துள்ள பூந்தமல்லியில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. அங்குதான் படத்தின் இறுதிகட்ட காட்சிகள் படம்பிடிக்கப்படவுள்ளது. இதற்காக சிம்பு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக படக்குழு பாராட்டி வருகிறது....