
மலையாள நடிகை லலிதா காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி…
நாடக நடிகையாக தனது நடிப்பு பயணத்தை துவங்கி மலையாளத்தில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை லலிதா. இவரை KPAC லலிதா என திரையுலகில் அழைப்பார்கள். இவர் 1969ம் ஆண்டு திரையுலகில் நடிக்க துவங்கினார்.
மலையாலத்தில் குணச்சித்திர நடிகையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். தமிழில் காதலுக்கு மரியாதை, பரமசிவன், கிரீடம், அலைபாயுதே ஆகிய படங்களில் நடித்துள்ளார். சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதையும் இவர் பெற்றுள்ளார். கடந்த ஒரு வருடமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொச்சியில் உள்ள அவரது வீட்டில் நேற்று இரவு இவர் மரணமடைந்தார். இவருக்கு வயது 74.
இவரின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்....