
ஒரே ஒரு புகைப்படம்.. தெறிக்கவிட்ட விஜய்… வைரல் புகைப்படம்…
விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஜனவரி மாதம் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 8 மாதங்களுக்கு பிறகு தியேட்டர் அதிபர்களுக்கு மாஸ்டர் படம் நல்ல வசூலை கொடுத்தது. அதேநேரம் படம் வெளியாகி 2 வாரம் ஆன நிலையில், தியேட்டரில் படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே அமேசான் பிரைமில் இப்படம் வெளியானது.
மேலும், இப்படத்தில் நீக்கப்பட்ட காட்சி ஒன்றை அமேசான் பிரைம் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. பெண்கள் அணியும் ஆடையே கற்பழிப்பை நிர்ணயிக்கும் என்கிற கருத்திற்கு எதிராக விஜய் ஆவேசமாக பேசும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் பலரும் இணையத்தில் பகிர தற்போது இந்த வீடியோ வைரலானது.
அதேபோல், சமீபத்தில் பனையூரில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திப்பதற்காக விஜய் வந்த போது அவரை பார்க்க ரசிகர்கள் கூடினர். அப்போது காரில் இருந்து விஜய் ரசிகர்களுக்கு கை காட்டும் புகைப்படம் சமூக வ...