web analytics
Tuesday, August 9SOCIAL MEDIA

Tag: மாஸ்டர்

மாஸ்டர் வசூலை காலி செய்த ஆர்.ஆர்.ஆர்…எவ்வளவு தெரியுமா?….

மாஸ்டர் வசூலை காலி செய்த ஆர்.ஆர்.ஆர்…எவ்வளவு தெரியுமா?….

News, Tamil News
பாகுபலி மற்றும் பாகுபலி 2 திரைப்படங்களுக்கு பின் ராஜமவுலி இயக்கியுள்ள திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியாபட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் இன்று உலகமெங்கும் வெளியானது. இப்படத்தின் மேக்கிங் சிறப்பாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் விஜயின் மாஸ்டர் வசூலை தாண்டியுள்ளது. ஆனால், தமிழகத்தில் இல்லை. இது நடந்துள்ளது ஆஸ்திரேலியாவில். மாஸ்டர் திரைப்படம் ஆஸ்திரேலியாவில் முதல் நாள் 253 டாலர் வசூலித்திருந்தது. ஆனால், ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் ஆஸ்திரேலியாவில் 441 டாலர் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவில் விஜயின் ரெக்கார்ட்டை ஆர்.ஆர்.ஆர் முறியடித்துள்ளது....
கேரளாவில் விஜயை ஓவர் டேக் செய்த அஜித்… வலிமை செய்த சாதனை…

கேரளாவில் விஜயை ஓவர் டேக் செய்த அஜித்… வலிமை செய்த சாதனை…

News, Tamil News
அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வலிமை திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழகத்தில் 650 தியேட்டர்களில் இப்படம் வெளியானது. இப்படத்தில் போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்செயல்களை செய்யும் பைக் கும்பலை பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக அஜித் நடித்துள்ளார். இப்படத்தில் பைக் சேஸிங் காட்சிகள் ஹாலிவுட் ஸ்டைலில் எடுக்கப்பட்டுள்ளது பெரிய பிளஸ்ஸாக அமைந்துள்ளது. இப்படம் தமிழகத்தில் மட்டும் நேற்று ஒரு நாளில் ரூ.36.17 கோடி வசூலித்துள்ளதாகவும், உலகம் முழுவதும் சேர்த்து 64 கோடி வசூல் செய்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதன் மூலம் முதல் நாள் அதிக வசூல் செய்த தமிழ் சினிமா என்கிற சாதானையை வலிமை நிகழ்த்தியுள்ளது. அதோடு, கேரளாவில் விஜய் படத்தின் சாதனையை வலிமை முறியடித்துள்ளது. விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் முதல் நாளில் 3.65 லட்சம் வசூல் செய்தது. ஆனால், வலிமை படம் ரூ...
மாஸ்டர் வெளியாகி ஒரு வருடம்… செம மாஸாக வெளியான வீடியோ…

மாஸ்டர் வெளியாகி ஒரு வருடம்… செம மாஸாக வெளியான வீடியோ…

Special Video, Tamil News, Videos
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த வருடம் ஜனவரி 13ம் தேதி வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது. கடந்த வருடம் கொரோனா ஊரடங்கில் தியேட்டர்கள் மூடப்பட்டு திறக்கப்பட்ட நிலையில் மாஸ்டர் படத்தின் வெற்றி சினிமா உலகினரை உற்சாகப்படுத்தியது. இந்த படம் வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் விஜய் ரசிகர்கள் இன்று டிவிட்டரில் இதை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக உருவாக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் மாஸ்டர் படம் துவங்கியது முதல் ஹிட் அடித்தது முதல் அப்படம் தொடர்பாக வெளியான செய்திகள் மற்றும் முக்கிய காட்சிகள் இடம் பெற்றுள்ளது. https://www.youtube.com/watch?v=qkBHXf9wq6Y...
யுடியூப்பில் சாதனை செய்த ‘வாத்தி கம்மிங்’ பாடல் வீடியோ….

யுடியூப்பில் சாதனை செய்த ‘வாத்தி கம்மிங்’ பாடல் வீடியோ….

News, Tamil News
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடல் யுடியூப்பில் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றது. இப்பாடலை இதுவரை 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதற்கு முன்பு விஜய் நடித்த மெர்சல் படத்தில் இடம் பெற்ற ‘ஆளப்போறான் தமிழன்’, பிகில் படத்தில் ‘வெறித்தனம்’ தெறி படத்தில் ‘என் ஜீவன்’ ஆகிய பாடல் வீடியோக்கள் 100 மில்லியன் பார்வைகளை பெற்றிருந்தது. ஆனால், வாத்தி கம்மிங் பாடல் வீடியோ 2 மாதத்தில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் #VaathiComing100MViews என்கிற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்து வருகின்றனர். ...
மீண்டும் விஜயை இயக்கும் அட்லீ?… ரசிகர்கள் அப்செட்

மீண்டும் விஜயை இயக்கும் அட்லீ?… ரசிகர்கள் அப்செட்

News, Tamil News
மாஸ்டருக்கு பின் நெல்சன் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படம் விஜய்க்கு 65வது திரைப்படமாகும் இப்படத்திற்கு பின் விஜயின் 66வது திரைப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தை அட்லியே இயக்கட்டும் என விஜய் கூறிவிட்டாராம். ஏற்கனவே, தெறி, மெர்சல், பிகில் என 3 திரைப்படங்களை இயக்கியவர். எனவே, வேறு இயக்குனர் படத்தில் விஜய் நடிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களை இந்த செய்தி அப்செட் ஆக்கியுள்ளதாம்.. ...
தளபதி 66 பட இயக்குனர் யார் தெரியுமா? – கசிந்த செய்தி

தளபதி 66 பட இயக்குனர் யார் தெரியுமா? – கசிந்த செய்தி

News, Tamil News
மாஸ்டருக்கு பின் நெல்சன் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படம் அவரின் 65வது திரைப்படமாகும். இப்படம் காமெடி ஆக்‌ஷன் கேங்ஸ்டர் டிராமா வகையிலான கதை எனக்கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்திற்கு பின் சதுரங்க வேட்டை, நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்க தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். வினோத் தற்போது அஜித்தை வைத்து வலிமை படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது....
திரையரங்கில் 100 சதவீத இருக்கை அனுமதி ரத்து… 50 சதவீதம் மட்டுமே!…

திரையரங்கில் 100 சதவீத இருக்கை அனுமதி ரத்து… 50 சதவீதம் மட்டுமே!…

News, Tamil News
தியேட்டரில் 100 சதவீதம் இருக்கைக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என நடிகர் விஜய் முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார். அதேபோல் நடிகர் சிம்புவும் டிவிட்டரில் கோரிக்கை விடுத்தார். அதன்பின் 100 சதவீதம் இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால், கொரோனா பரவல் குறையாத நிலைஇல், அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், தமிழக அரசீன் முடிவுக்கு மத்திய அரசும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், திரை அரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அளிக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படுவதாகவும், மறு அறிவிப்பு வெளிவரும் வரை 50 சதவீதம் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது....
என் ரசிகர்கள் மாஸ்டர் படம் பாருங்க!… விஜய் ரசிகர்களிடமிருந்து தப்பித்த சிம்பு…

என் ரசிகர்கள் மாஸ்டர் படம் பாருங்க!… விஜய் ரசிகர்களிடமிருந்து தப்பித்த சிம்பு…

News, Tamil News
பொங்கலை முன்னிட்டு விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதியும், 14ம் தேதி சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படமும் வெளியாகவுள்ளது. வழக்கமாக விஜய், அஜித் படம் வெளியாகும் வேறு பெரிய நடிகர் படம் வெளியானால், சமூக வலைத்தளங்களில் விஜய் & அஜித் ரசிகர்கள் அந்த நடிகர் மற்றும் படத்தை கடுமையாக விமர்சிப்பார்கள். விஸ்வாசம் வெளியான போது ரஜினி நடித்த பேட்டை படமும் வெளியானது. எனவே, அஜித் ரசிகர்கள் ரஜினியை கடுமையாக விமர்சித்தனர். என் ரசிகர்கள் மாஸ்டர் படம் பாருங்கள். விஜய் அண்ணா ரசிகர்கள் என் ஈஸ்வரன் பாருங்கள் என அறிக்கை வெளியிட்டுள்ளார். இதைக்கண்டு நெகிழ்ந்து போன விஜய் ரசிகர்கள் கண்டிப்பாக ஈஸ்வரன் படத்தை பார்ப்போம் என தெரிவித்து வருகின்றனர்.   #Master #Eeswaran #SpreadLove 🙏🏻 pic.twitter.com/g6SOq1a1uE — Silambarasan TR (@SilambarasanTR_) January 4, 2021 ...