
ரஜினியின் அறிமுக பாடலை எழுதும் சிவகார்த்திகேயன்…தலைவர் 169 அப்டேட்….
அண்ணாத்த திரைப்படத்திற்கு பின் ரஜினி யாரின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. பல இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்ட நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது நெல்சன் திலீப் குமார் என்பது உறுதியானது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
ஏற்கனவே கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கியவர் நெல்சன். தற்போது விஜயை வைத்து பீஸ்ட் படத்தை அவர் இயக்கி முடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ரஜினியின் அறிமுக பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. சிவகார்த்திகேயன் ஏற்கனவே தான் நடிக்கும் படங்களில் பாடல்களை எழுதியுள்ளார். நெல்சன் இயக்கத்தில் அவர் நடித்த டாக்டர் படத்திலும் ‘செல்லம்மா’ பாடலை எழுதியிருந்தார். மேலும், அதே நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடலையும் சிவகார்த்திகேயன் எழுத...