
படத்தின் காட்சிகள் லீக்…ஷங்கர் – ராம்சரண் படக்குழுவினர் அதிர்ச்சி
தமிழில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஷங்கர் தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜூனை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார்.
இப்படம் ஒரு அரசியல் ஆக்ஷன் கதை எனக்கூறப்படுகிறது. தெலுங்கில் அதிக பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வரும் தில் ராஜூ இப்படத்தி தயாரித்து வருகிறார். இப்படத்தில் கியாரா அத்வானி முக்கிய வேடத்திலும், ராஷ்மிகா மந்தனா ஒரு சிறிய வேடத்திலும் நடிக்கவுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு அதிக பொருட்செலவில் ஒரு சண்டை காட்சியையும், ஒரு பாடல் காட்சியையும் ஷங்கர் படமாக்கினார். தற்போது ராஜமுந்திரி பகுதியில் சில காட்சிகளை அவர் எடுத்து வருகிறார். படப்பிடிப்பை காண வரும் பொதுமக்களில் சிலர் படப்பிடிப்பு காட்சிகளை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர படக்குழு அதிர்ச்சியாகியுள்ளது.
எனவே, அந்த வீடியோக்களை நீக்கும் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.மேலும், இப்படத்தின் பட...