
ஓடிடியில் களம் இறங்கும் இயக்குனர் பாலா…
தமிழ் சினிமாவில் சேது, பிதாமகன், நந்தா, அவன் இவன், நான் கடவுள், நாச்சியர் உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் இயக்குனர் பாலா. இவருக்கென தனி ரசிகர் கூட்டம் உண்டு. நடிகர் விக்ரமின் மகன் துருவை வைத்து அவர் இயக்கிய வர்மா திரைப்படம் ஓடிடியில் வெளியானது. ஏனெனில், அப்படத்தை பாலா இயக்கிய விதம் தயாரிப்பாளர் தரப்பினருக்கு பிடிக்கவில்லை. எனவே, அப்படம் வேறு இயக்குனர் இயக்க ஆதித்ய வர்மா என்கிற தலைப்பில் மீண்டும் எடுக்கப்பட்டது.
தற்போது ஓடிடி தளம் ஒன்றிற்காக அவர் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாக செய்திகள் அடிபட்டு வருகிறது. ஆனால், கதை, திரைக்கதையை பாலா எழுதவில்லை. மற்றவர்களின் கதையை அவர் இயக்குவதாக கூறப்படுகிறது....