
வாவ்.. செம க்யூட்டா தல அஜித்… வெளியான வலிமை பட புகைப்படங்கள்…
அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் அஜித் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 13ம் தேதி வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்தார். ஆனால், கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி அளித்தது. மேலும், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு ஆகியவை அறிவிக்கப்படது. இந்த கட்டுப்பாடு தொடர்ந்தால் வலிமை படத்தின் வசூலை இது கடுமையாக பாதிக்கும் என்பதால் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாக போனிகபூர் அறிவித்தார். தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. மேலும், இரவு நேர மற்றும் ஞாயிறு ஊரடங்குகள் நீக்கப்பட்டு விட்டன. எனவே பிப்ரவரி 24ம் தேதி வ...