
வலிமை டீசர், டிரெய்லர் வீடியோ எப்போது தெரியுமா? – பரபர அப்டேட்..
நடிகர் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள திரைப்படம் வலிமை. தமிழ் சினிமாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படமாக வலிமை இருக்கிறது. இப்படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர் கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்கியுள்ளார்.
இப்படம் அஜித் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இப்படம் துவங்கி 2 வருடங்கள் ஆகிவிட்டது. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டு, கதை மாறி, படப்பிடிப்பு இடம் மாறி, நடிகர்களுக்காக கதை மாறி என படக்குழு பல சிக்கல்களை சந்தித்தது. ஒருவழியாக படப்பிடிப்பு முடித்து இப்படம் பொங்கல் விருந்தாக வெளியாகவுள்ளது. இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு கடந்த 14ம் தேதி வெளியானது. இந்த மேக்கிங் வீடியோவில் பைக் ரேஸ் காட்சிகள் மற்றும் அஜித் வீலிங் செய்த போது கீழே விழுந்த காட்சிகள், அதன்பின் மீண்டும் வீலிங் செய்யும் காட...