web analytics
Monday, October 3SOCIAL MEDIA

Tag: வலிமை

அஜித் 61 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அந்த நடிகை?!…

அஜித் 61 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அந்த நடிகை?!…

News, Tamil News
வலிமை படத்திற்கு பின் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் மங்காத்தா போல் நெகட்டிவ்வான வேடத்தில் அஜித் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதரபாத்தில் விரைவில் துவங்கவுள்ளது. இப்படம் வங்கி கொள்ளையை மையமாக கொண்டு உருவாக்கப்படவுள்ளது. இப்படத்திற்காக சென்னை அண்ணாசாலை போன்ற செட் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கவுள்ளது தெரியவந்துள்ளது. இவர் ஏற்கனவே, அசுரன் படத்தில் தனுஷின் மனைவியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது....
பீஸ்ட், வலிமை வசூலை தாண்டிய கேஜிஎப்-2…திரையுலகினர் ஆச்சர்யம்…

பீஸ்ட், வலிமை வசூலை தாண்டிய கேஜிஎப்-2…திரையுலகினர் ஆச்சர்யம்…

News, Tamil News
தற்போது அனைத்து மாநிலங்களிலும் டப்பிங் படங்கள் அதிக வசூலை குவித்து வருகிறது. பாகுபலி, பாகுபலி 2, புஷ்பா தற்போது கேஜிஎப் 2 என பெரிய பட்டியலே இருக்கிறது. அதிலும் கன்னட திரைப்படமான கேஜிஎப்2 அசத்தலான வெற்றியை பெற்றுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் கேஜிஎப்2 வசூலை வாரி குவித்து வருகிறது. குறிப்பாக விஜயின் பீஸ்ட் பட வசூலை இப்படம் முறியடித்துள்ளது. கேஜிஎப்2 படம் வெளியாகி 8 நாளில் ரூ.64.04 கோடி வசூலித்தது. பீஸ்ட் திரைப்படம் ரூ.61.17 கோடியை மட்டுமே வசூல் செய்திருந்தது. இத்தனைக்கும் பீஸ்ட் திரைப்படம் ஒரு நாள் முன்பே வெளியானது. தற்போது வரை தமிழகத்தில் ரூ.90 கோடியை வசூல் செய்துள்ள கேஜிஎப்-2 விரைவில் ரூ.100 கோடி வசூலை தொடும் என கணிக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில், பீஸ்ட், வலிமை ஆகிய படங்களின் வசூலை இப்படம் தாண்டியுள்ளது. படம் வெளியாக...
ரொம்ப எதிர்பார்த்தேன்…அந்த அளவுக்கு இல்லை…வலிமை பற்றி கருத்து சொன்ன வெங்கட்பிரபு….

ரொம்ப எதிர்பார்த்தேன்…அந்த அளவுக்கு இல்லை…வலிமை பற்றி கருத்து சொன்ன வெங்கட்பிரபு….

News, Tamil News
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் வலிமை. இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யவில்லை என பரவலாக விமர்சனம் எழுந்தது. அஜித் ரசிகர்களை தவிர மற்றவர்களை இப்படம் பெரிதாக ஈர்க்கவில்லை. இந்நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் வலிமை படம் பற்றி பேசிய மாநாடு பட இயக்குனர் வெங்கட்பிரபு ‘அஜித் சார் படம் என்பதால் மிகவும் எதிர்பாத்தேன். அதுவும் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார் என்றவுடனே எதிர்ப்பார்ப்பு எங்கேயோ இருந்தது. ஆனால், படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை . மிகவும் எதிர்பார்த்தேன். ஒரு வேளை அதிகமாக எதிர்பார்த்ததால் அப்படி தோன்றியதா என தெரியவில்லை’ எனக் கூறியுள்ளார்....
தியேட்டரில் தாக்கப்பட்டாரா புளூசட்ட மாறன்?….அவரே வெளியிட்ட புகைப்படம்…

தியேட்டரில் தாக்கப்பட்டாரா புளூசட்ட மாறன்?….அவரே வெளியிட்ட புகைப்படம்…

News, Tamil News
தமிழ் டாக்கீஸ் யுடியூப் சேனலில் புதிய திரைப்படங்களை விமர்சனம் செய்து வருபவர் புளூசட்டமாறன். இவர் நல்ல கதையம்சம் கொண்ட கலை சினிமாக்களை மட்டுமே பாராட்டி பேசுவார். வழக்கான கமர்சியல் மசாலா படங்களை கடுமையாக கிண்டலடித்தும், நக்கலடித்தும் பேசுவார். இதனால், ரஜினி, அஜித், விஜய், சிம்பு என பலரின் ரசிகர்களின் கோபத்தையும் அவர் சம்பாதித்தார். வலிமை படத்தை கடுமையாக கிண்டலடித்து விமர்சனம் செய்தார். குறிப்பாக அஜித்தின் தோற்றத்தை நக்கலடித்து பேசியிருந்தார். இது அஜித் ரசிகர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. எனவே, டிவிட்டரில் அவரை கடுமையாக அவர்கள் திட்டி வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் உள்ள பி.வி.ஆர் தியேட்டருக்கு மாறன் சென்றிருந்த போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்பம் அஜித் ரசிகர்களிடையே பரவியது. மாறனை சில அஜித் ரசிகர்கள் தாக்கியதாகவும் செய்திகள் பரவியது. ஆனால், இதை மாறன் மறுத்துள்ளார். அந்த புகைப...
வலிமை படம் காப்பியா?… தயாரிப்பாளர், இயக்குனருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்….

வலிமை படம் காப்பியா?… தயாரிப்பாளர், இயக்குனருக்கு நீதிமன்றம் நோட்டீஸ்….

News, Tamil News
போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். இப்படம் சில நாட்களுக்கு முன்பு தியேட்டர்களில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது. இப்போதும் இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் தனது படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்களை அனுமதியின்றி பயன்படுத்தி பயன்படுத்தியதாக மெட்ரோ படத்தின் தயாரிப்பாளர் ஜெயகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு வலிமை திரைப்பட தயாரிப்பாளர் போனிகபூர் மற்றும் இயக்குனர் ஹெச்.வினோத் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
அஜீத்துக்கு பக்கவாதம் ஏற்படும் நிலை ஏற்பட்டது… அதிர்ச்சி கொடுத்த மருத்துவர்….

அஜீத்துக்கு பக்கவாதம் ஏற்படும் நிலை ஏற்பட்டது… அதிர்ச்சி கொடுத்த மருத்துவர்….

News, Tamil News
நடிகர் அஜித் சினிமாவில் நடிப்பதோடு மட்டுமில்லாமல் பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடுவது, ரிமோட்டில் இயங்கும் குட்டி விமானத்தை இயக்குவது என பலவற்றிலும் ஆர்வம் உடையவர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர் அதை செய்ய தவறுவதே இல்லை. அதேபோல், அவர் நடிக்கும் திரைப்படங்களில் பைக் மற்றும் கார் ரேஸ் காட்சிகளில் டூப் போடாமல் அவரே ஓட்டுவார். சில சமயம் இதில் விபத்தும் ஏற்பட்டு அவருக்கு அடிபடுவதுண்டு. அவரது முதுகில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. ஆனால், அஜித் மாறவே இல்லை. வலிமை படத்தில் கூட பைக் வீலிங் செய்யும் போது கீழே விழுந்து அவர் பலத்த காயமடைந்தார். ஆனாலும் ஓய்வு கூட எடுக்காமல் அந்த காட்சியில் மீண்டும் நடித்தார். இந்நிலையில், அவருக்கு சிகிச்சை அளித்து வரும் எலும்பியல் மருத்துவர் நரேஷ் பத்மநாபன் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் ‘வலிமை படத்தில் ஒரு காட்சியில் அஜித் கீழே விழுந்ததைத்தான் ரசிகர்...
வேற மாறி…. வேற மாறி.. அசத்தலான கெட்டப்பில் நடிகர் அஜித்….

வேற மாறி…. வேற மாறி.. அசத்தலான கெட்டப்பில் நடிகர் அஜித்….

News, Tamil News
வலிமை திரைப்படத்திற்கு பின் மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இப்படத்தில் அஜித் வில்லன் மற்றும் ஹீரோ என 2 வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் ஹைதராபாத்தில் துவங்கவுள்ளது. இந்த படத்துக்காக ஒரு புதிய கெட்டப்புக்கு அஜித் மாறியுள்ளார். வெள்ளை நிற தலைமுடி, மீசை, நீளமான முடி என அவரின் சமீபத்திய புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், தனது மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை அஜித் குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதிலும், அதே கெட்டப்பில்தான் இருக்கிறார் அஜித். ...
வலிமை வினோத்தோட கதையே இல்லையாம்!… இது என்னடா புதுக்கதை….

வலிமை வினோத்தோட கதையே இல்லையாம்!… இது என்னடா புதுக்கதை….

News, Tamil News
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் வலிமை. இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியாகி அஜித் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. ஒருபக்கம் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்தது. தேவையில்லாத செண்டிமெண்ட் காட்சிகள் ரசிகர்களை கவரவில்லை எனவும் பரவலாக கூறப்பட்டது. இந்நிலையில், இந்த படத்தின் கதையே அஜித்துடையது எனக்கூறப்படுகிறது. அதாவது, இப்படத்தின் ஒன்லைன் கதையை அஜித் கூற வினோத் அதை டெவலப் செய்து திரைக்கதையாக மாற்றியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களுக்கு சிறப்பான கதையை வினோத் அமைத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் பாராட்டை பெற்றார். அஜித் அவரை அழைத்த போது தற்போது அடுத்து எடுக்கவுள்ள அஜித் 61 படக்கதையைத்தான் அஜித்திடம் வினோத் கூறியுள்ளார். ஆனால், இதை அப்புறம் செய்வோம். பாலிவுட் ஹிட் அடித்த பிங்க்...
பீஸ்ட் படத்திலும் அந்த செண்டிமெண்ட்… வலிமைக்கு பின்பும் ரிஸ்க் எடுக்கும் விஜய்…

பீஸ்ட் படத்திலும் அந்த செண்டிமெண்ட்… வலிமைக்கு பின்பும் ரிஸ்க் எடுக்கும் விஜய்…

News, Tamil News
விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் இயக்கி வருகிறார். இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் மலையாள நடிகை அபர்ணாதாஸும் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான புகைப்படம் மூலமே அவர் இப்படத்தில் நடிப்பது ரசிகர்களுக்கு தெரிய வந்தது. தற்போது அவர் விஜயின் தங்கையாக நடிப்பது தெரியவந்துள்ளது. இடைவேளைக்கு பின் இவருக்கும் - விஜய்க்குமான செண்டிமெண்ட் காட்சிகள் நிறைய வருகிறதாம். படத்தின் கதையே அவரை சுற்றி நகர்வதாகவும் கூறப்படுகிறது.   சமீபத்தில்தான் ரஜினியின் அண்ணாத்த படம் வெளியாகி அதில் இடம் பெற்றிருந்த அண்ணன் - தங்கை செண்டிமெண்ட் காட்சிகள் பெரிதும் கிண்டலடிக்கப்பட்டது. அதேபோல், வலிமை படத்திலும் செண்டிமெண்ட் காட்சிகள் ரசிகர்களை சோதித்தது. ஆனால், பீஸ்ட் படத்தில் செண்டிமெண்ட் காட்சிகள் எப்படி உருவாக்...
அஜித்துக்கு பின் விஜய் சேதுபதி… பக்கா ஸ்கெட்ச் போட்ட ஹெச்.வினோத்….

அஜித்துக்கு பின் விஜய் சேதுபதி… பக்கா ஸ்கெட்ச் போட்ட ஹெச்.வினோத்….

News, Tamil News
சதுரங்க வேட்டை படம் மூலம் கவனம் ஈர்த்தவர் ஹெச்.வினோத். அதன்பின், கார்த்தியை வைத்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை எடுத்தார். அப்படத்திற்கு பின் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை இயக்கினார். இப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக ஹெச்.வினோத் மாறினார். அஜித்தை வைத்து அவர் இயக்கிய வலிமை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. கலவையான விமர்சனங்கள் வந்தாலும், இப்படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது. இதையும் படிங்க: வாளிப்பான உடம்பை காட்டும் வலிமை பட நாயகி… வைரல் புகைப்படங்கள்… இப்படத்திற்கு பின்பும் போனிகபூர்- அஜித்- ஹெச்.வினோத் டீம் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைகிறது. இது அஜித்தின் 61வது திரைப்படமாகும். இப்படத்தை குறுகிய கால தயாரிப்பாக விரைவாக முடித்துவிட்டு, அடுத்து விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை வினோத் இயக்கவுள்ளாராம். இப்படத்த...
வாளிப்பான உடம்பை காட்டும் வலிமை பட நாயகி… வைரல் புகைப்படங்கள்…

வாளிப்பான உடம்பை காட்டும் வலிமை பட நாயகி… வைரல் புகைப்படங்கள்…

News, Tamil News
ரஜினி நடித்த காலா படத்தில் நடித்தவர் ஹூமா குரோஷி.. தற்போது வலிமை படத்திலும் நடித்துள்ளார்.. பாலிவுட் நடிகையான இவர் தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வலிமை படத்தை கிண்டலடித்த நடிகைக்கு எதிர்ப்பு.. இன்ஸ்டாகிராமில் கண்ணீர் வீடியோ..

வலிமை படத்தை கிண்டலடித்த நடிகைக்கு எதிர்ப்பு.. இன்ஸ்டாகிராமில் கண்ணீர் வீடியோ..

News, Tamil News, Videos
அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வலிமை. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இப்படம் ரிலீஸ் ஆனது. இப்படத்தில் பைக் சேஸிங் காட்சிகள் மட்டுமே நன்றாக இருப்பதாகவும் மற்றபடி தேவையில்லாத செண்டிமெண்ட் காட்சிகள் போரடிப்பதாகவும் பலரும் கருத்து கூறி வருகின்றனர். படம் வெளியான முதல் நாளில் படம் பார்த்துவிட்டு வெளிவந்த சிலரிடம் யுடியூப் சேனல் பலரும் ‘படம் எப்படி இருக்கிறது’ என கேள்வி கேட்டு அந்த வீடியோவை ஒளிபரப்பினர். சீரியல் நடிகை ஸ்ரீநிதி படம் பார்த்துவிட்டு வெளியே வந்த போது அவரிடம் கேட்ட போது ‘அஜித் அழகாக இருக்கிறார். ஆனால் படம் ஓடுவதை விட பைக்தான் அதிகமாக ஓடுகிறது’ என கருத்து கூறினார். இது அஜித் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. எனவே, அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரை கண்டபடி திட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீநிதி இதற்கு விளக்கமளித்து ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் ‘ ...
கேரளாவில் விஜயை ஓவர் டேக் செய்த அஜித்… வலிமை செய்த சாதனை…

கேரளாவில் விஜயை ஓவர் டேக் செய்த அஜித்… வலிமை செய்த சாதனை…

News, Tamil News
அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வலிமை திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழகத்தில் 650 தியேட்டர்களில் இப்படம் வெளியானது. இப்படத்தில் போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்செயல்களை செய்யும் பைக் கும்பலை பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக அஜித் நடித்துள்ளார். இப்படத்தில் பைக் சேஸிங் காட்சிகள் ஹாலிவுட் ஸ்டைலில் எடுக்கப்பட்டுள்ளது பெரிய பிளஸ்ஸாக அமைந்துள்ளது. இப்படம் தமிழகத்தில் மட்டும் நேற்று ஒரு நாளில் ரூ.36.17 கோடி வசூலித்துள்ளதாகவும், உலகம் முழுவதும் சேர்த்து 64 கோடி வசூல் செய்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதன் மூலம் முதல் நாள் அதிக வசூல் செய்த தமிழ் சினிமா என்கிற சாதானையை வலிமை நிகழ்த்தியுள்ளது. அதோடு, கேரளாவில் விஜய் படத்தின் சாதனையை வலிமை முறியடித்துள்ளது. விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் முதல் நாளில் 3.65 லட்சம் வசூல் செய்தது. ஆனால், வலிமை படம் ரூ...
சாதனை படைத்த வலிமை… முதல் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?…

சாதனை படைத்த வலிமை… முதல் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?…

News, Tamil News
அஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வலிமை திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழகத்தில் 650 தியேட்டர்களில் இப்படம் வெளியானது. இப்படத்தில் போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்செயல்களை செய்யும் பைக் கும்பலை பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக அஜித் நடித்துள்ளார். இப்படத்தில் பைக் சேஸிங் காட்சிகள் ஹாலிவுட் ஸ்டைலில் எடுக்கப்பட்டுள்ளது பெரிய பிளஸ்ஸாக அமைந்துள்ளது. இந்நிலையில், இப்படம் தமிழகத்தில் மட்டும் நேற்று ஒரு நாளில் ரூ.36.17 கோடி வசூலித்துள்ளதாகவும், உலகம் முழுவதும் சேர்த்து 64 கோடி வசூல் செய்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை அஜித் ரசிகர்கள் உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர். ...
வலிமைக்கு கிடைத்த ஒப்பனிங்… அஜித் ரியாக்‌ஷன் இதுதானாம்!.

வலிமைக்கு கிடைத்த ஒப்பனிங்… அஜித் ரியாக்‌ஷன் இதுதானாம்!.

News, Tamil News
  அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினராலும் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படமாக வலிமை இருக்கிறது. இப்படம் உலகம் முழுவதும் சுமார் 400 திரையரங்குகளில் இன்று வெளியானது. இப்படத்திற்கான ஆன்லைன் முன்பதிவுகள் தியேட்டர்கள் 3 நாட்களுக்கு முன்பே துவங்கிவிட்டது. முதல் 4 நாட்களுக்கான டிக்கெட்டுகள் பல தியேட்டர்களில் விற்று தீர்ந்து விட்டது. அதிகாலை சிறப்பு காட்சிக்கு பல தியேட்டர்களில் 500 முதல் 2 ஆயிரம் வரை டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. BookMyshow இணையதளத்தில் 2 மில்லியனுக்கு மேல் டிக்கெட்டுகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இப்படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்துள்ளது. இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வலிமை படத்திற்கு கிடைத்த ஓப்பனிங் பற்றி அஜித்திடம் கூறியுள்ளர். இதற்கு ‘இதுவும் கடந்து போகும். நம்மை சுற்றி நல்லது நட...