
யுடியூப்பில் சாதனை செய்த ‘வாத்தி கம்மிங்’ பாடல் வீடியோ….
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடல் யுடியூப்பில் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றது.
இப்பாடலை இதுவரை 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதற்கு முன்பு விஜய் நடித்த மெர்சல் படத்தில் இடம் பெற்ற ‘ஆளப்போறான் தமிழன்’, பிகில் படத்தில் ‘வெறித்தனம்’ தெறி படத்தில் ‘என் ஜீவன்’ ஆகிய பாடல் வீடியோக்கள் 100 மில்லியன் பார்வைகளை பெற்றிருந்தது.
ஆனால், வாத்தி கம்மிங் பாடல் வீடியோ 2 மாதத்தில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் #VaathiComing100MViews என்கிற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்து வருகின்றனர். ...