விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து தற்போது ரூ.30 கோடி சம்பளம் பெற்ற நடிகராக மாறியிருப்பவர் சிவகார்த்திகேயன்.
மெரினா படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் ரூ. 10 ஆயிரம் மட்டுமே. தற்போது நடிக்கும் தெலுங்கு படத்திற்கு அவர் 27 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் புதிய படத்திற்கும் ரூ.25 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஒருபக்கம் அவரின் ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும் போதும் தயாரிப்பாளர் கடன் வாங்கிய பஞ்சாயத்துக்களுக்கு சிவகார்த்திகேயன் பொறுப்பேற்று பொறுப்பேற்று பட கோடிகளுக்கு கடனாளி ஆகிவிட்டார். எனவேதான் தற்போது பஞ்சாயத்து வராத தயாரிப்பாளராக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் சொத்து மதிப்பு ரூ.98 கோடி என்கிற செய்தி திரையுலகில் கசிந்து ...
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் கேப்ரியல்லா. சிறு வயது முதலே நடனத்தில் ஆர்வம் உள்ளவர். இவரை பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்தது விஜய் டிவி. பிக்பாஸ் வீட்டில் நன்றாக விளையாடி ரசிகர்களிடம் நல்ல பெயர் எடுத்தார்.
சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது அவரின் ஆசையாக இருந்தது. ஆனால், வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது சின்னத்திரையில் நடிக்கவுள்ளர். ஈரமான ரோஜாவே சீசன் 2-வில் கேப்ரியல்லா கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.
ஈரமான ரோஜாவே சீரியல் விஜய் டிவியில் வெளியாகி வெற்றியை பெற்ற ஒரு சீரியல் ஆகும். எனவே, தற்போது அதன் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளது. இதில்தான் கேப்ரியல்லா நடிக்கவுள்ளார்....
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். இந்நிகழ்ச்சியால் இவருக்கு பல ரசிகர்கள் உருவாகியுள்ளனர். எனவே, இவருக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகிறது.
அஜித் நடிக்கும் வலிமை படத்தில் சிறு வேடத்திலும், ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். அதேபோல், பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் புகழ் நடிக்கவுள்ளார்.
தற்போது பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபுவும் விஜய் டிவியில் இருந்து வந்தவர்தான். புகழும் அவரை போலவே தலை முடியை கொண்டிருப்பதால் யோகிபாபு போல அவரும் மாறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்....
சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர் பாக்கியராஜ் கண்ணன். இவர் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் சுல்தான். இப்படத்தில் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உள்ள ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இத்திரைப்படம் ஏப்ரல் 2ம் தேதி தியேட்டரில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை ரூ.8.25 கோடிக்கு விஜய் டிவி வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கார்த்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த ‘கைதி’ திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையையும் விஜய் டிவி வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது....