web analytics
Thursday, August 18SOCIAL MEDIA

Tag: விவாகரத்து

மனைவியை பிரிந்தார் இயக்குனர் பாலா… ரசிகர்கள் அதிர்ச்சி…

மனைவியை பிரிந்தார் இயக்குனர் பாலா… ரசிகர்கள் அதிர்ச்சி…

News, Tamil News
விக்ரமின் திரை வாழ்வை மாற்றிய சேது படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. நந்தா, பிதாமகன், நான் கடவுள் என கவனிக்கத்தக்க திரைப்படங்களை இயக்கியவர். நான் கடவுள் படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதும் பெற்றார். அடுத்து சூர்யாவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில், இவர் தனது மனைவி முத்து மலரிடமிருந்து இன்று விவாகரத்து பெற்றது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் 2004ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகளும் உண்டு. கடந்த 4 வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும், இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றதும் தெரிய வந்துள்ளது. இது திரையுலக வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால்?… விவாகரத்துக்கு பின் மனம் திறந்த நாக சைதன்யா…

சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால்?… விவாகரத்துக்கு பின் மனம் திறந்த நாக சைதன்யா…

News, Tamil News
தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் சமந்தா. சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த புஷ்பா படத்தில் கூட அவர் நடனமாடிய ‘ஓ சொல்றியா’ பாடல் செம ஹிட் ஆனது. நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவும் 2017ம் வருடம் திருமணம் செய்து கொண்டனர். 4 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்களுக்குள் சில காரணங்களால் மனக்கசப்பு ஏற்பட்டது. எனவே, சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் ஒருவரை ஒருவர் பிரிந்தனர். அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டது. ஆனால், இருவரும் இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், சமீபத்தில் நாக சைத்தன்யா அளித்த பேட்டியில் ‘பிரிந்திருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை. எங்கள் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காகவே நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு இது. இதுபோன்ற சூழலில் விவகாரத்து ஒன்றே சிறந்த முடிவு. சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால் நானும் மகிழ்ச்சியாக இருப்பேன்’ என தெரிவித்துள்ளார்...