web analytics
Wednesday, June 29SOCIAL MEDIA

Tag: விஸ்வாசம்

2வது திருமணம் செய்து கொள்கிறாரா இமான்…உண்மை நிலவரம் என்ன?…

2வது திருமணம் செய்து கொள்கிறாரா இமான்…உண்மை நிலவரம் என்ன?…

News, Tamil News
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் டி. இமான். விஸ்வாசம் படத்தில் அவர் இசையமைத்த கண்ணான கண்ணே பாடலுக்கு தேசிய விருதையும் பெற்றார். ரஜினியின் அண்ணாத்த படத்திற்கும் இசையமைத்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு இவர் தனது மனைவி மோனிகாவை பிரிவதாக அறிவித்தார். மேலும், எங்களின் தனிப்பட்ட முடிவுக்கு மதிப்பு கொடுங்கள் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில், சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணை அவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், அந்த பெண்ணின் பெயர் உமா எனவும் செய்திகள் வெளியானது. இதுபற்றி விளக்கமளித்துள்ள இமானின் தந்தை ‘அந்த செய்தியில் உண்மை இல்லை. எந்த விஷயத்தையும் இமான் வெளிப்படையாக அறிவிப்பவர். விவாகரத்து பற்றி எப்படி சொன்னாரோ அதுபோல் திருமணம் நடந்தால் அது பற்றியும் அவரே அறிவிப்பார்’ என தெரிவித்தார்....
டி.ஆர்.பியில் அஜித்தை கூட முந்த முடியாத அண்ணாத்த.. இது என்னடா சோதனை?…

டி.ஆர்.பியில் அஜித்தை கூட முந்த முடியாத அண்ணாத்த.. இது என்னடா சோதனை?…

News, Tamil News
பொதுவாக தீபாவளி, பொங்கல் என்றாலே தொலைக்காட்சி சேனல்கள் போட்டி போட்டுக்கொண்டு தியேட்டரில் ரிலீஸ் ஆகி சில மாதங்களே ஆன புதிய படங்களை ஒளிபரப்புவார்கள். இந்த முறை சன் டிவியில் பொங்கலன்று அண்ணாத்த படம் ஒளிபரப்பானது. ஆனால், அஜித் நடித்த விஸ்வாசம் படத்தின் டி.ஆர்.பியை கூட இந்த படம் தாண்டவில்லை. அவ்வளவு ஏன்? விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் திரைப்படம் பெற்ற டி.ஆர்.பியை கூட அண்ணாத்த தாண்டவில்லை. சன் டிவியில் பிச்சைக்காரன் படம் டி.ஆர்.பியில் 17.69 புள்ளிகளும், விஸ்வாசம் படம் 18.14 புள்ளிகளும் பெற்றிருந்த நிலையில், அண்ணாத்த படம் 17.37 புள்ளிகள் மட்டுமே கிடைத்தது. ஆனாலும், 16.96 புள்ளிகள் பெற்ற சர்கார் படத்தையும், 16.76 புள்ளிகளை பெற்ற சீமராஜா படங்களையும் அண்ணாத்த திரைப்படம் முந்தியுள்ளது....