
அனுமதி எல்லாம் கேட்க மாட்டேன்!.. விஷால் எதை சொல்கிறார் தெரியுமா?…
தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்த விஷால், ஆனால், கடந்த சில வருடங்களாக அவரின் திரைப்படங்கள் பெரிய ஹிட் அடிப்பதில்லை.
அவர் நடிப்பில் ‘வீரமே வாகை சூடும்’ உருவாகி ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. இப்படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார். மேலும், யோகிபாபு காமெடி செய்துள்ளார். மேலும், மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாக நடித்துள்ளார்.
இப்படத்தை விஷால் தனது சொந்த நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரி மூலம் தயாரித்துள்ளார். இப்படம் வருகிற 26ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு விழாவில் பேசிய விஷால் ‘நான் புது முக இயக்குனர் படத்தில் நடித்தால் யுவன் சங்கர் ராஜாதான் இசை என இயக்குனரிடம் கூறிவிடுவேன். இதற்காக யுவனிடம் அனுமதி எல்லாம் கேட்க மாட்டேன். கட்டாயமாக சொல்லி விடுவேன். ஏனெனி...