
பயத்தில் தூங்கவில்லை… லைவ் டெலிகாஸ்ட் பட அனுபவம் பேசும் காஜல் அகர்வால்…
இயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பில் காஜல் அகர்வால் உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியிருக்கும் வெப் சீரியஸ் ‘லைவ் டெலிகாஸ்ட்’. தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக ஒரு வீட்டில் ஆவி இருப்பது போல் பொய்யாக காட்டும் ஒரு குழுவினர், ஆனால், அதே வீட்டில் இருக்கும் ஆவி என திகில் காட்சிகள் நிறைந்த பேய் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது
இந்நிலையில், இப்படம் பற்றி கருத்து தெரிவித்த காஜல் அகர்வால் ‘ இந்த கதைக்கு நாங்கள் படப்பிடிப்பு நடத்திய இடம் பொருத்தமாக இருந்தது. ஒரு மலை உச்சியில் இருந்த அந்த வீட்டிற்கு அருகில் எதுவுமே கிடைக்கவில்லை. ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிந்து நான் சரியாக தூங்கவே இல்லை. பயத்தில் திடீரென முழித்துக்கொள்வேன். அதனால் படப்பிடிப்பில் நான் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்தேன்’ என தெரிவித்துள்ளார். ...