Wednesday, April 14SOCIAL MEDIA
Shadow

Tag: ஹாலிவுட்

ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு… அதிரும் இணையதளம்…

ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு… அதிரும் இணையதளம்…

News, Tamil News
தெலுங்கில் சில படங்களை இயக்கிய ராஜம்வுலி பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். அவரின் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் விரும்பினர். தற்போது ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரை வைத்து புதிய படத்தை அவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் அலியா பட், அஜய் தேவ்கன் மற்றும் சில ஹாலிவுட் நடிகர்களும் நடித்து வருகின்றனர். பிரம்மாண்ட செலவில் உருவாகும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இத்திரைப்படம் இந்த வரும் அக்டோபர் 13ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும், ராம் சரண் குதிரை ஓட்டுவது போலவும், ஜூனியர் என்.டி.ஆர் மோட்டார் சைக்கிள் ஓட்டுவது போலவும் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதையடுத்து #RRRFestivalOnOct13th என்கிற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது.   Witness the unstoppable force of fire and water on October 1...
அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் இயக்குனர் படத்தில் தனுஷ்….பரபரக்கும் சினிமா உலகம்..

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் இயக்குனர் படத்தில் தனுஷ்….பரபரக்கும் சினிமா உலகம்..

News, Tamil News
தமிழ் சினிமாவில் ஆடுகளம், வட சென்னை, அசுரன் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்தவர் நடிகர் தனுஷ். பாலிவுட், ஹாலிவுட் என வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் பாலிவுட்டில் ‘அட்ராங்கி ரே’ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த வருடம் வெளியாகி பல மில்லியன்களை வசூலித்த ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்தை இயக்கிய இயக்குனரின் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஜோ ருசோ மற்றும் ஆண்டனி ருசோ என இருவர் இயக்கியிருந்தனர். தமிழ் , ஹிந்தி என எந்த மொழியிலும் இந்த வாய்ப்பு யாருக்கும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது....