
நிறுத்தப்பட்ட அண்ணாத்தே ஷூட்டிங்..காதலுடன் ஊர் சுற்ற கிளம்பிய நயந்தாரா…
பல மாதங்களாக நடக்காமலிருந்த அண்ணாத்தே படப்பிடிப்பு சமீபத்தில்தான் ஹைதராபாத்தில் மீண்டும் துவங்கியது. ரஜினி அரசியல் கட்சியை துவங்கவுள்ளதால் படப்பிடிப்பு வேகமாக நடந்து வந்தது. ரஜினி ஒரு நாளைக்கு 14 மணி நேரம் நடித்துக்கொடுத்து வந்தார். இந்நிலையில், மீண்டும் புதிய கொரோனா வைரஸ் பரவல் துவங்கியுள்ளதாக செய்திகள் வெளியானது. எனவே, படப்பிடிப்பு குழுவினர் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதில், 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆனால், ரஜினிக்கு கொரோனா தொற்று நெகட்டிவ்வாக வந்தது. ஆயினும், தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை சன் பிக்சர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. இதைத்தொடர்ந்து அப்படத்தில் நடித்து வந்த நடிகை நயன்தாரா, படப்பிடிப்பு இல்லாத காரணத்தினால் தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் ஹைதராபாத் சாலையில் நடந்து செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வெள...