
புளூசட்ட மாறனை எச்சரித்த நடிகர் ஆரி… திரையுலகில் பரபரப்பு
புதிய சினிமாக்களை யுடியூப்பில் விமர்சனம் செய்பவர் புளூசட்ட மாறன். தமிழ்டாக்கில் எனும் யுடியூப் சேனலில் மாறன் விமர்சனம் செய்து வருகிறார். தரமான, சிறந்த, கலையம்சம் கொண்ட, நல்ல கதையம்சம் கொண்ட படங்களை மட்டுமே மாறன் பாராட்டி பேசுவார். மற்றபடி வழக்கமான ஹீரோ-வில்லன் மசாலா திரைப்படங்களை கடுமையாக கிண்டலடிப்பார்.
வலிமை படத்தையும் இப்படித்தான் விமர்சனம் செய்திருந்தார். அதிலும், அஜித்தின் தோற்றத்தை பஜன்லால் சேட், பரோட்டா மாவு என்றெல்லாம் கிண்டலடித்திருந்தார். இந்நிலையில், கள்ளன் திரைப்பட விழாவில் பேசிய நடிகர் ஆரி, புளூசட்டமாறனை எச்சரிக்கும் படி பேசினார். ஒருவரை பற்றி பேசும் போது அவர் எப்படி வந்தார் என்பது பற்றி தெரிந்து பேச வேண்டும். தனது கடின உழைப்பால் உச்ச நட்சத்திரமக வளர்ந்திருப்பவர் நடிகர் அஜித். லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றிருப்பவர்.
அப்படிப்பட்டவரை பரோட்டா மாவு மூஞ்சி என்றெல்லாம் வீடியோ...