
உங்கள் கர்மா பழிதீர்க்கும்!.. தன்னை ட்ரோல் செய்தவர்களுக்கு அஸ்வின் பதிலடி…
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் அஸ்வின். இவர் என்ன சொல்லப்போகிறாய் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் குக் வித் கோமாளி புகழும் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அஸ்வின் குமார் ‘எனக்கு ஒரு கெட்டப்பழக்கம் உண்டு. கதை கேட்கும்போது எனக்கு பிடிக்கவில்லை எனில் தூங்கி விடுவேன். இதுவரை 40 கதைகளை கேட்டு தூங்கி விட்டேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை இந்த படத்தின் கதைதான்’ என பேசினார்.
இது பலத்த எதிர்ப்புக்கு உள்ளானது. உதவி இயக்குனர்கள் பலரும் அஸ்வினின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். ஒரு படம் கூட நடித்து இன்னும் வெளியாகவில்லை. அதற்குள்ள இவ்வளவு திமிறா? என அவர்கள் கடுமையாக விமர்சித்தனர். மேலும், பல மீம்ஸ்களும் வலம் வந்தது. அதோடு, ஸ்லீப்பிங் ஸ்டார் என்கிற பட்டமும் அஸ்வினுக்கு வந...