
நடிகர் சங்க தேர்தல் முடிவு… விஷால், கார்த்தி வெற்றி…..
2019ம் ஆண்டு நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற்றது. இதில், பாக்கியராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும், நாசர் தலைமையில் பாண்டவர் அணியும் போட்டியிட்டது. ஆனால், அதில் முறைகேடு நடந்ததாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்படவில்லை.
இன்று காலை அந்த தேர்தல் முடிவு எண்ணப்பட்டது. துவக்கம் முதலே பாண்டவர் அணியை சேர்ந்த நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ் என அனைவரும் அதிக எண்ணிக்கையில் முன்னிலையில் இருந்தனர்.
பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷாலும், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தியும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிக்கான முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை....