
பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த நடிகர்… என்ன ரோல் தெரியுமா?….
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். பலபேர் முயன்றும் கல்கி எழுதிய இந்த நூலை மணிரத்னம் தற்போது திரைப்படமாக எடுத்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் மீண்டும் துவங்கியுள்ளது.
இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் ரகுமான் நடிக்கவுள்ளது தெரியவந்துள்ளது. இன்னும் 2 மாதத்தில் பாதி படப்பிடிப்பு முடிந்துவிடும் எனக்கூறப்படுகிறது....