
அண்ணாத்த படத்தில் ஜகபதிபாபு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த போது, படப்பிடிப்பு குழுவினர் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ரஜினியின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. எனவே, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ரஜினி சென்னை திரும்பினார்.
2 மாதங்களுக்கு பின் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இதற்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ஜகபதிபாபு இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இதை சன்பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவர் தமிழில் லிங்கா, பைரவா, விஸ்வாசம் ஆகிய படங்களில் வில்லனாக நடித்தவர் என்ப...