
ஒரு நாளில் இவ்ளோ செலவா?… வடிவேலு படத்தில் பஞ்சாயத்து….
பல வருடங்களுக்கு பின் வடிவேலு நடிக்கும் திரைப்படம் நாய் சேகர் ரிட்டன்ஸ். இப்படத்தின் இயக்குனர் சுராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், இப்படத்தில் வடிவேலு ஒரு பெரிய வீட்டில் இருப்பது போல் காட்ட வேண்டும் என விரும்பிய இயக்குனர் ராஜஸ்தானில் உள்ள ஒரு பெரிய பங்களாவை வாடகைக்கு எடுத்துள்ளார். 70 பேரை அழைத்து கொண்டு ராஜஸ்தான் செல்கிறேன் என தயாரிப்பு நிறுவனத்திடம் கூறிய சுராஜ், 140 பேரை கூட்டுக்கொண்டு அங்கு சென்றுள்ளார். இதனால் ஒரு நாளைக்கு ரூ.16 லட்சம் செலவாகியுள்ளது.
இதனால் அதிர்ந்து போன லைக்கா நிறுவனம், அனைவரையும் கூட்டுக்கொண்டு சென்னை திரும்புங்கள் எனக்கூற நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் டீம் சென்னைக்கு ரிட்டன்ஸ் ஆகிவிட்டதாம். இதனால், லைக்க...