web analytics
Saturday, January 28SOCIAL MEDIA

Tag: Actor Vijay

Varisu Producer Dil Raju Fined!

Varisu Producer Dil Raju Fined!

English News, News
The Audio launch of the Thalapathy Vijay starrer Varisu happened on Saturday in a grand manner. The event happened in the presence of Vijay and the stars from the film. Now the latest we hear is that the producer Dil Raju has to pay a fine because of what the fans did at the ceremony. Thalapathy Vijay's fans came to celebrate the audio launch event in huge numbers. The stadium rocked by the mass response of the fans throughout the ceremony which you would have come across in several videos that were posted on social media. It has now come as a shock that the fans have broken the chairs at the event and because of this Varisu Producer, Dil Raju has been fined. Officials have informed that most of the seats in the Nehru Stadium were damaged during the ceremony that took place o...
விஜய் 67 படத்தை தயாரிக்கும் உதயநிதி ஸ்டாலின்?… கசிந்த செய்தி…

விஜய் 67 படத்தை தயாரிக்கும் உதயநிதி ஸ்டாலின்?… கசிந்த செய்தி…

News, Tamil News
பீஸ்ட் படத்திற்கு பின் நடிகர் விஜய் தற்போது தெலுங்கு-தமிழ் மொழிகளில் உருவாகும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இது விஜயின் 66வது திரைப்படமாகும். இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படத்திற்கு பின் விஜய் நடிக்கும் அவரின் 67வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இப்படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்த லலித்குமார் தயாரிப்பாகத்தான் கூறப்பட்டது. தற்போது உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் பெயர் அடிபடுகிறது. உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் திரைப்படம் தற்போது பல புதிய திரைப்படங்களை வினியோகம் செய்து வருகிறது. தற்போத மீண்டும் புதிய படங்களை தயாரிக்க முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே விஜய் நடித்த குருவி படத்தை உதயநிதி ஸ்டாலின் தயாரித்தது குறிப்பிடத்தக்கது....
தளபதி 67-ல் அது எதுவும் இல்லையாம்!..வேற லெவல் விஜயை பாக்க போறீங்க!…

தளபதி 67-ல் அது எதுவும் இல்லையாம்!..வேற லெவல் விஜயை பாக்க போறீங்க!…

News, Tamil News
விஜய் படங்கள் என்றாலே பாடல் காட்சிகள், நடனம் மற்றும் சண்டை காட்சிகளைத்தான் விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள்.விஜய் நடிக்கும் அனைத்து திரைப்படங்களிலும் இவை தவறாமல் இடம் பெற்றிருக்கும். இந்நிலையில், தளபதி 67 படத்தில் முதல் முறையாக பாடல் காட்சிகள் எதுவும் இல்லாமல் விஜய் நடிக்கவுள்ளார். இன்னும் சொல்லப்போனால் இப்படத்தில் விஜய்க்கு ஜோடி கூட கிடையாது. விஜய் அடுத்து ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மீண்டும் நடிக்கவுள்ளார். இப்படத்தில்தான் விஜய்க்கு நடனம்,பாடல், ஜோடி என எதுவுமே கிடையாதாம். எனவே, விஜயை வேற மாதிரி லோகேஷ் கனகராஜ் காட்டப்போகிறார் என நம்பலாம்.....
பீஸ்ட் படக்குழுவுக்கு விஜய் கொடுத்த ட்ரீட்…நெல்சன் பகிர்ந்த புகைப்படம்…

பீஸ்ட் படக்குழுவுக்கு விஜய் கொடுத்த ட்ரீட்…நெல்சன் பகிர்ந்த புகைப்படம்…

News, Tamil News
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்க விஜய், பூஜா ஹெக்டே, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என விமர்சனங்கள் எழுந்தது. நெல்சனின் ஸ்டைலே இப்படத்தில் இல்லை எனவும், காமெடி எதுவும் வொர்க் ஆக வில்லை எனவும், கதை, திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை எனவும் பொதுவான ரசிகர்கள் தெரிவித்தனர். பீஸ்ட் வேஸ்ட் என்கிற ரீதியில் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர். இப்படத்தை கிண்டலடித்து மீம்ஸ்களும் தாறுமாறாக வெளியானது. இதைத்தொடர்ந்து அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பே நெல்சனுக்கு இழுபறியாக இருக்கிறது என செய்திகள் வெளியானது. ஆனால், நெல்சன் இதுபற்றி எதையும் தெரிவிக்கவில்லை. ஒருபக்கம் பீஸ்ட் திரைப்படம் நல்ல வசூலை பெற்றதாக செய்தி...
நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் கலக்கும் பீஸ்ட்…..

நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் கலக்கும் பீஸ்ட்…..

News, Tamil News
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்க விஜய், பூஜா ஹெக்டே, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. விஜய் ரசிகர்கள் பல நாட்களுக்கு டிக்கெட் ரிசர்வ் செய்து வைத்துள்ளனர். ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என விமர்சனங்கள் எழுந்தது. நெல்சனின் ஸ்டைலே இப்படத்தில் இல்லை எனவும்,காமெடி எதுவும் வொர்க் ஆக வில்லை எனவும், கதை, திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை எனவும் பொதுவான ரசிகர்கள் தெரிவித்தனர். பீஸ்ட் வேஸ்ட் என்கிற ரீதியில் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனாலும், இப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. முதல் நாள் வசூலாக இப்படம் ரூ 38 கோடியை இப்படம் தமிழகத்தில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதோடு, உலகம் முழுவதும் சேர்த்து இப்படம் இரண்டு நாளில் 100 கோடியை வசூல் செய்ததாகவும் செய்திகள் பரவ...
இப்படி செஞ்சிட்டியே நெல்சா!… ரசிகர்களை ஏமாற்றியதா பீஸ்ட்?…

இப்படி செஞ்சிட்டியே நெல்சா!… ரசிகர்களை ஏமாற்றியதா பீஸ்ட்?…

News, Tamil News
விஜய் ரசிகர்கள் தாறுமாறாக எதிர்பார்த்த பீஸ்ட் திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியானது. வழக்கம் போல் விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த படத்தை பார்த்து வருகின்றனர். அதேபோல், பொதுவான சினிமா ரசிகர்கள் பலரும் இப்படத்தை இன்று காலை முதல் காட்சியே பார்த்து ரசித்தனர். இந்நிலையில், பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே பலரும் கூறி வருகின்றனர். விஜய் படத்தை தாங்கி பிடித்தாலும் கதை மற்றும் திரைக்கதையில் நெல்சன் கோட்டை விட்டைவிட்டார். முதல் பாதி சுமாராக இருக்கிறது. இரண்டாம் பாதி சோதிக்கிறது என்றே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். கிங்ஸ்லி, யோகிபாபு என இருந்தும் பெரிய காமெடி காட்சிகள் இல்லை எனவும், ஆக்‌ஷன் படமா, காமெடி படமா என நெல்சன் குழம்பிவிட்டதாகவும் பலரும் கூறி வருகின்றனர். படத்தில் பின்னணி இசை, பாடல் காட்சிகள், சில சண்டை காட்சிகள் நன்றாக இருந்தாலும் திரைக...
பீஸ்ட் படம் பாக்க லீவும் கொடுத்து டிக்கெட்டும் வாங்கி கொடுத்த நிறுவனம்…சுவாரஸ்ய தகவல்…

பீஸ்ட் படம் பாக்க லீவும் கொடுத்து டிக்கெட்டும் வாங்கி கொடுத்த நிறுவனம்…சுவாரஸ்ய தகவல்…

News, Tamil News
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற 13ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளர். இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படத்திற்கான முன்பதிவு சில நாட்களுக்கு முன்பே துவங்கிவிட்டது. எனவே, விஜய் ரசிகர்கள் ஆர்வமுடம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இப்படத்திற்கு முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்துள்ளது. முதல் ஒரு வாரத்திற்கு டிக்கெட்டுகள் விற்பனை ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருப்பூர் பின்னலாடை நிறுவனம் ஒன்றில் பீஸ்ட் படம் பார்ப்பதற்காக 13ம் தேதி விடுப்பு கேட்டு நிறைய பேர் விண்ணப்பித்துள்ளனர். இதைப் புரிந்து கொண்ட நிறுவனம் 13ம் தேதிக்கு விடுமுறை அறிவித்ததோடு, டிக்கெட்டும் ரிசர்வ் செய்து கொடுத்திருக்...
விஜய் மகனுக்கு சூப்பர் கதை சொன்ன பிரபல இயக்குனர்.. அப்புறம் என்னாச்சி தெரியுமா?…

விஜய் மகனுக்கு சூப்பர் கதை சொன்ன பிரபல இயக்குனர்.. அப்புறம் என்னாச்சி தெரியுமா?…

News, Tamil News
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் தளபதி என அழைக்கப்பட்டு வருபவர் நடிகர் விஜய். அவரின் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வருகிற 13ம் தேதி வெளியாகவுள்ளது. விஜய் ரசிகர்கள் இப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விஜய்க்கு சஞ்சய் என ஒரு மகன் இருக்கிறார். இவரின் புகைப்படங்கள் ஏற்கனவே பல முறை வெளியாகியிருக்கிறது. தற்போது அவர் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று சன் டிவியில் இயக்குனர் நெல்சனுடன் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டார். அப்போது நெல்சன் கேட்ட கேள்விகளுக்கு விஜய் பதில் கூறினார். உங்கள் மகன் சஞ்சய்க்கு நடிக்க ஆர்வமிருக்கிறதா? இல்லை அவருக்கு எதில் ஆர்வம் என நெல்சன் கேள்வி கேட்டார். இதற்கு பதில் கூறிய விஜய் ‘ஒருமுறை பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் என்னிடம் ஒரு கதையை கூற வந்தார். சரி எனக்குதான் கதை சொல்லப்போகிறார் என நினைத்தேன். ஆனால், அவர் கதை சொல்ல வந்தது ...
பீஸ்ட் படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியாம்!…இப்பவே சொல்லிட்டாங்க!…

பீஸ்ட் படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியாம்!…இப்பவே சொல்லிட்டாங்க!…

News, Tamil News
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற 13ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளர். இப்படத்தை விஜய் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படத்திற்கான முன்பதிவு சில நாட்களுக்கு முன்பே துவங்கிவிட்டது. எனவே, விஜய் ரசிகர்கள் ஆர்வமுடம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இப்படத்திற்கு முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்துள்ளது. முதல் ஒரு வாரத்திற்கு டிக்கெட்டுகள் விற்பனை ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், முன் பதிவு டிக்கெட்டுகளின் அடிப்படையில் பீஸ்ட் படத்தின் முதல் நாள் வசூலை சிலர் கணித்துள்ளனர். தமிழ்நாட்டில் ரூ. 37 கோடி, கேரளாவில் 7.6 கோடி, ஆந்திரா / தெலுங்கானா - 10 கோடி, கர்நாடகா - 8 கோடிகள், மற்ற மாநிலங்கள் - 4 கோடிகள், ஓவர்சீ...
பீஸ்ட் நள்ளிரவு காட்சி ரெடி.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?…..

பீஸ்ட் நள்ளிரவு காட்சி ரெடி.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?…..

News, Tamil News
விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கும் திரைப்படம் பீஸ்ட். இப்படம் வருகிற 13ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. பொதுவாக விஜய், அஜித், ரஜினி போன்ற நடிகர்கள் படங்கள் வெளியானால் நள்ளிரவு காட்சி ஒன்றை திரையிடுவார்கள். நள்ளிரவு 1 மணி அல்லது அதிகாலை 4 மணிக்கு அந்த காட்சி ஒளிபரப்பாகும். பீஸ்ட் படத்திற்கும் 1 மணிக்கு ஒரு காட்சியை சென்னை உள்ளிட்ட சில திரையரங்குகளில் ஒளிபரப்ப உள்ளனர். இந்நிலையில், இந்த காட்சிக்கு ரூ.2 ஆயிரம் என டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். பொதுவாக அரசு நிர்ணயிக்கும் விலையில் மட்டுமே டிக்கெட்டுகள் விற்கப்பட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், இதையெல்லாம் திரையரங்க உரிமையாளர்கள் பின்பற்றுவதில்லை. மிக அதிக விலை கொடுத்து பெரிய படங்களை வாங்குவதால் அவர்களும் வேறு வழியின்றி அதிக விலைக்கு அவர் விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதாக தியேட்டர்கள் அதிபர்கள் தரப்பு கூறுகிறது. 2 ஆயி...
திடீரென ரசிகர்களை எச்சரித்த நடிகர் விஜய்.. பின்னணி இதுதானாம்!….

திடீரென ரசிகர்களை எச்சரித்த நடிகர் விஜய்.. பின்னணி இதுதானாம்!….

News, Tamil News
சமூகவலைத்தளங்களில் அரசியல்வாதிகளை அவதூறாக விமர்சிக்கக் கூடாது, மீம்ஸ் போட்டு கிண்டலடிக்கக் கூடாது என விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அந்த இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அரசு பதவிகளில் இருப்பவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோரை விஜய் மக்கள் இயக்கத்தினர் விமர்சிக்க கூடாது. மீறி விமர்சித்தால் மக்கள் இயக்கத்தை விட்டு நீக்குவதுடன் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் ரசிகர்கள் விமர்சனம் செய்யக்கூடாது. பத்திரிக்கை, இணையதளங்கள், போஸ்டர்களில் விமர்சித்து எழுதவோ, பதிவிடமோ, மீம்ஸ் போடவோ கூடாது’ என இன்று காலை அறிக்கை வெளியானது. தற்போது இதன் பின்னணி தெரியவந்துள்ளது. சமீபத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் டிரெய்லர் வெளியானது. அதில், காவி நிற துணியை விஜய் கத்தியால் குத்தி கிழிப்பது போல ஒரு காட்ச...
திடீரென சந்தித்து கொண்ட விஜய் – மு.க.ஸ்டாலின் : வைரல் புகைப்படங்கள்…

திடீரென சந்தித்து கொண்ட விஜய் – மு.க.ஸ்டாலின் : வைரல் புகைப்படங்கள்…

News, Tamil News
நடிகர் விஜய் இன்னும் நேரடி அரசியலுக்கு வரவில்லை என்றாலும் அவரை சுற்றி அரசியல் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் என்கிற பெயரில் அவரின் ரசிகர்கள் தேர்தல்களில் போட்டியிட்டு வருகின்றனர். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கூட விஜய் ரசிகர்கள் பலரும் சுயேச்சையாக போட்டியிட்டு அதில் 129 பேர் வெற்றி பெற்றனர். எனவே, எதிர்காலத்தில் விஜய் அரசியலுக்கு வருவார் என்கிற கணிப்பு பலருக்கும் இருக்கிறது. ஒருபக்கம் விஜய் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படம் வருகிற 13ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தற்போது அவர் அடுத்து நடிக்கவுள்ள படத்தின் பூஜையும் இன்று சென்னையில் நடந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் இன்று காலை முதல் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில், திடீரென முதல்வர் ஸ்டாலினும், விஜயும் சந்தித்துக்கொண்ட நிகழ்வு நடந்துள்ளது. பிகில் பட தயா...
பூஜையுடன் துவங்கிய தளபதி 66 படப்பிடிப்பு….வைரல் புகைப்படங்கள்…

பூஜையுடன் துவங்கிய தளபதி 66 படப்பிடிப்பு….வைரல் புகைப்படங்கள்…

News, Tamil News
நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற 13ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு பின் தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இது விஜயின் 66வது திரைப்படமாகும். இப்படத்தை தெலுங்கில் மெகா பட்ஜெட் படங்களை தயாரிக்கும் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். இந்நிலையில், இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் எளிமையாக நடந்தது. இதில், விஜய், ராஷ்மிகா மந்தனா, தில் ராஜூ, வம்சி உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர்.இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ...
பீஸ்ட் டிரெய்லரில் வந்த அந்த முகமுடி வில்லன் யார் தெரியுமா?….

பீஸ்ட் டிரெய்லரில் வந்த அந்த முகமுடி வில்லன் யார் தெரியுமா?….

News, Tamil News
மாஸ்டர் படத்துக்கு பின் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை டாக்டர் பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வீடியோ சமீபத்தில் வெளியானது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு மாலை தீவிரவாதிகள் கைப்பற்றி அங்குள்ள மக்களை பணயக்கைதிகளாக வைத்துள்ளனர். அந்த மாலில் இருக்கும் விஜய் தீவிரவாதிகளை துவம்சம் செய்து மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை ஆகும். பீஸ்ட் டிரெய்லர் துவங்கியதுமே தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ள மாலில் முகமுடி அணிந்த ஒரு நபரை காட்டுவார்கள். அது யார் என தற்போது தெரியவந்துள்ளது. மலையாள நடிகர் சைன் டாம் சாக்கோ-தான் அந்த முகமுடி வில்லன் என்பது தெரியவந்துள்ளது. தனது இன்ஸ்டாக...
பல வருடங்களுக்கு பின் டிவி நிகழ்ச்சியில் விஜய்… எப்போது தெரியுமா?….

பல வருடங்களுக்கு பின் டிவி நிகழ்ச்சியில் விஜய்… எப்போது தெரியுமா?….

News, Tamil News
நடிகர் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பதில்லை. ஏனெனில், தேவையில்லாத கேள்விகளை கேட்டு மொக்கை போடுவார்கள். சில சமயம் பதில் கூற முடியாத கேள்விகளை கேட்டு தர்ம சங்கடத்திற்கும் உள்ளாக்குவார்கள். ஆனால், தற்போது அவர் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அவர் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் நெல்சன் இயக்கியுள்ளார். இப்படத்தில் பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 13ம் தேதி வெளியாகிறது. பொதுவாக ஒரு புதிய படத்தை விளம்பரம் செய்ய இசை வெளியீட்டு விழா மற்றும் செய்தியாளர் சந்திப்புகளை படக்குழு நடத்துவார்கள். ஆனால், இந்த முறை பீஸ்ட் படத்துக்கு இசை வெளியீட்டு விழா இல்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சன் டிவியில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினரின் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 10ம் தேதி இந்த நிகழ்...