web analytics
Thursday, July 7SOCIAL MEDIA

Tag: actres srinidhi

வலிமை படத்தை கிண்டலடித்த நடிகைக்கு எதிர்ப்பு.. இன்ஸ்டாகிராமில் கண்ணீர் வீடியோ..

வலிமை படத்தை கிண்டலடித்த நடிகைக்கு எதிர்ப்பு.. இன்ஸ்டாகிராமில் கண்ணீர் வீடியோ..

News, Tamil News, Videos
அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வலிமை. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இப்படம் ரிலீஸ் ஆனது. இப்படத்தில் பைக் சேஸிங் காட்சிகள் மட்டுமே நன்றாக இருப்பதாகவும் மற்றபடி தேவையில்லாத செண்டிமெண்ட் காட்சிகள் போரடிப்பதாகவும் பலரும் கருத்து கூறி வருகின்றனர். படம் வெளியான முதல் நாளில் படம் பார்த்துவிட்டு வெளிவந்த சிலரிடம் யுடியூப் சேனல் பலரும் ‘படம் எப்படி இருக்கிறது’ என கேள்வி கேட்டு அந்த வீடியோவை ஒளிபரப்பினர். சீரியல் நடிகை ஸ்ரீநிதி படம் பார்த்துவிட்டு வெளியே வந்த போது அவரிடம் கேட்ட போது ‘அஜித் அழகாக இருக்கிறார். ஆனால் படம் ஓடுவதை விட பைக்தான் அதிகமாக ஓடுகிறது’ என கருத்து கூறினார். இது அஜித் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. எனவே, அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரை கண்டபடி திட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீநிதி இதற்கு விளக்கமளித்து ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் ‘ ...